தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது - ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்தனர் மக்கள்

Apr 25 2014 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. சராசரியாக தமிழகம் முழுவதும் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதுச்சேரியில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில், சுமார் 66 சதவீத வாக்குகள் பதிவாயின.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெற்று முடிந்தது.

அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். ஆண்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதேபோல் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். தமிழகத்தில் பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் மற்றும் நீலகிரி தொகுதிக்குட்பட்ட உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் குளிரையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் அதிகாலையிலேயே சென்று வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணிக்கு பின்னரும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் வரிசையில் நின்றதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் வாய்ப்பளித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 75 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவள்ளூர் தனித் தொகுதியில் 76 சதவீதமும், வடசென்னையில் 66 சதவீதமும், தென்சென்னை மக்களவைத் தொகுதியில் 61 சதவீத வாக்குகளும், மத்திய சென்னைத் தொகுதியில் 63 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில், 65 சதவீதமும், காஞ்சிபுரம் தனித் தொகுதியில் 69 சதவீத வாக்குகளும், அரக்கோணம் தொகுதியில் 79 சதவீதமும், வேலூரில் 76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கிருஷ்ணகிரி தொகுதியில் 79 சதவீதம் - தருமபுரி தொகுதியில் 81 சதவீதம், திருவண்ணாமலை தொகுதியில் 79 சதவீதம் - ஆரணி தொகுதியில் 80 சதவீதம் - விழுப்புரம் தனித் தொகுதியில் 79 சதவீதம் - கள்ளக்குறிச்சி தொகுதியில் 80 சதவீதம் - சேலம் தொகுதியில் 79 சதவீதம் - நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 80 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் 79 சதவீதம் - திருப்பூர் தொகுதியில் 78 சதவீதம் - நீலகிரி தனித் தொகுதியில் 75 சதவீதம் - கோயம்புத்தூர் தொகுதியில் 71 சதவீதம் - பொள்ளாச்சி தொகுதியில் 76 சதவீதம் - திண்டுக்கல் தொகுதியில் 80 சதவீதம் - கரூர் தொகுதியில் 81 சதவீதம் - திருச்சி தொகுதியில் 72 சதவீதம் - பெரம்பலூர் தொகுதியில் 80 சதவீதம் - கடலூர் தொகுதியில் 80 சதவீதம் - சிதம்பரம் தனித் தொகுதியில் 80 சதவீதம் - மயிலாடுதுறை தொகுதியில் 72 சதவீதம் - நாகப்பட்டினம் தனித் தொகுதியில் 78 சதவீதம் - தஞ்சாவூர் தொகுதியில் 76 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேபோல், சிவகங்கை தொகுதியில் 74 சதவீதம் - மதுரை மக்களவைத் தொகுதியில் 68 சதவீதம் - தேனியில் 73 சதவீதம் - விருதுநகர் தொகுதியில் 76 சதவீதம் - ராமநாதபுரம் தொகுதியில் 70 சதவீதம் - தூத்துக்குடி தொகுதியில் 71 சதவீதம் - தென்காசி தனித் தொகுதியில் 73 சதவீதம் - திருநெல்வேலி தொகுதியில் 69 சதவீதம் - கன்னியாகுமரி தொகுதியில் 70% சதவீதம் மற்றும் புதுச்சேரி தொகுதியில் 82 சதவீதம் வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சராசரியாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00