கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கழக நிர்வாகிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பு - அதிகபட்சமாக கரூரில் 18 சதவீத வாக்குப்பதிவு

Apr 25 2014 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று நடைபெற்ற தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் திரு. பண்ருட்டி ராமச்சந்திரன், சென்னை அசோக் நகரில் உள்ள கன்னியப்பன் நகர் உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்தியில் அமையவுள்ள புதிய அரசில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முக்கியப் பங்கு வகிப்பார் என்று குறிப்பிட்டார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு.ஆர். சரத்குமார் எம்.எல்.ஏ., கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. சரத்குமார், 40 மக்களவைத் தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செட்டிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஜான்பாண்டியன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சமாதானபுரம் ஒய்.எம்.சி.ஏ. பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் திரு. ஷேக்தாவூத், தனது குடும்பத்தினருடன் சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இளம் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பதால், அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும் என குறிப்பிட்டார்.

கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் திரு. உ. தனியரசு எம்.எல்.ஏ., திருப்பூர் மாவட்டம் கவுண்டச்சிபுதூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், கடலூர் மாவட்டம் புலியூர் காட்டுசாகை அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் திரு. பஷீர் அகமது, சென்னை ஏழுகிணறு மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் திரு. பூவை ஜெகன்மூர்த்தி, பூவிருந்தவல்லியை அடுத்த நேமம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஸ்ரீதர் வாண்டையார், சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பு.தா. இளங்கோவன், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பூலாமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. பெஸ்ட் ராமசாமி, திருப்பூர் மாவட்டம் ராயபுரம் மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

முதன்முறை வாக்காளர்கள்

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், புதிய வாக்காளர்கள் அணி அணியாக வந்து ஆர்வத்துடன் வாக்களித்திருப்பது, இளம் தலைமுறையினரிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டிருப்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றி வரும் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள், இந்தியா முழுவதும் தொடர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, தாங்கள் வாக்களித்ததாக புதிய வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில், 117 தொகுதிகளில் 6-வது கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த தேர்தலில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 13 லட்சம் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவாக, அதாவது 29 புள்ளி ஒன்று ஐந்து சதவீதம் வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வாக்காளர்கள் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று காலை முதலே உற்சாகத்துடன், வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய வாக்காளர்களில் தாங்களும் இடம்பெற்று, முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சி அளிப்பதாக, சென்னையின் பல்வேறு வாக்குச் சாவடிகளிலும் வாக்களித்த முதல்முறை வாக்காளர்கள் தெரிவித்தனர்.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், நாகை மக்களவைத் தொகுதியில் அடங்கிய திருவாரூர் ஆகிய பகுதிகளில் முதன்முறையாக வாக்களித்த இளம் தலைமுறையினர், குறிப்பாக பெண்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் நாடு முழுமைக்கும் கிடைத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் தாங்கள் வாக்களித்ததாக குறிப்பிட்டனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்களித்த கல்லூரி மாணவ - மாணவிகள், தாங்கள் முதல் முறையாக ஜனநாயக கடமையாற்றியது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தனர்.

மாற்றுத் திறனாளிகள்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் வாக்குச் சாவடிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இம்முறை திருநங்கைகளும் அதிக அளவில் வாக்களித்தனர்.

திருச்சி விமானநிலையம் அருகே, மாநகராட்சி பள்ளியில் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக, சாய்தளம் மற்றும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதனைப் பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் பலர் வாக்களித்தனர்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி, திண்டுக்கல் தொகுதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலும், திருநங்கைகள், உற்சாகத்துடன் வாக்களித்தனர். ஜனநாயகக் கடமையை முறையாக ஆற்றியது, தங்களுக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

நட்சத்திர வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திரையுலக நட்சத்திரங்கள், ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடிகர் கமலஹாசன், நடிகை கவுதமியுடன் இன்று காலையில், சென்னை எல்டாம்ஸ் சாலை மாநகராட்சிப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தியாகராய நகர் ஹிந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தனர்.

நடிகர் அஜித்குமார், அவரது மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நடிகர் ஜீவா, தியாகராயநகர் ஹிந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதிகாலையிலிருந்தே, வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். 40 மக்களவைத் தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

தென்சென்னை மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், மயிலாப்பூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்தார்.

மத்திய சென்னை தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. S.R. விஜயகுமார், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்களித்தார்.

வடசென்னை தொகுதி கழக வேட்பாளர் திரு. T.G. வெங்கடேஷ் பாபு, சென்னை புரசைவாக்கம் சுந்தரம் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

திருவள்ளூர் தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் P.வேணுகோபால், திரு.வி.க. நகர் மாநகராட்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி கழக வேட்பாளர் திரு.கே.என்.ராமச்சந்திரன், சென்னை வண்டலூரில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

காஞ்சிபுரம் தொகுதி கழக வேட்பாளர் திருமதி.மரகதம்குமரவேல், திருப்போரூரை அடுத்த தையூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

திருச்சி மக்களவைத் தொகுதியின் கழக வேட்பாளர் திரு. ப. குமார், காஜாமலை அல்சாதிக் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கை பதிவு செய்தார்.

திண்டுக்கல் தொகுதி கழக வேட்பாளர் திரு. M. உதயகுமார், நிலக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாக்களித்தார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. P.R. சுந்தரம், நாமகிரிப்பேட்டையை அடுத்த அவரது சொந்த கிராமமான பச்சுடையாம்பாளையத்தில் வாக்களித்தார்.

இதேபோல், தஞ்சாவூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. கு. பரசுராமன், நீலகிரி ஊராட்சி பள்ளியிலும் - கிருஷ்ணகிரி தொகுதி கழக வேட்பாளர் திரு. K. அசோக்குமார், விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியிலும் - தேனி தொகுதி கழக வேட்பாளர் திரு. R. பார்த்திபன், கூழையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர். திருநெல்வேலி தொகுதி கழக வேட்பாளர் திரு. K.R.P. பிரபாகரன், கீழப்பாவூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி - நாகப்பட்டினம் கழக வேட்பாளர் டாக்டர் கே. கோபால் நன்னிலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - மயிலாடுதுறை தொகுதி கழக வேட்பாளர் திரு. R.K. பாரதிமோகன், கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாக்குச்சாவடி - கடலூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. அ. அருண்மொழிதேவன், திட்டக்குடி வாக்குச்சாவடி - வேலூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. பா. செங்குட்டுவன், வேலூர் அரசு கல்வியியல் கல்லூரி ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

திருப்பூர் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருமதி. V. சத்தியபாமா, கோபிச்செட்டிப்பாளையம் மணியகாரன்புதூரிலும் - தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் திரு. P.S. மோகன், தருமபுரி வள்ளலார் பள்ளி வாக்குச் சாவடியிலும் - ஆரணி தொகுதி கழக வேட்பாளர் திரு. செஞ்சி சேவல் வெ. ஏழுமலை, அண்ணமங்கலம் கிராம வாக்குச்சாவடியிலும் - கள்ளக்குறிச்சி தொகுதி கழக வேட்பாளர் டாக்டர். க. காமராஜ், சோமண்டார்குடி கிராம அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனர்.

விழுப்புரம் தொகுதி கழக வேட்பாளர் திரு. S. ராஜேந்திரன், ஆதனப்பட்டு கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடி - தென்காசி தொகுதி கழக வேட்பாளர் திருமதி. வசந்தி முருகேசன், பாளையங்கோட்டை, சாந்திநகர் தொடக்கப்பள்ளி - கன்னியாகுமரி தொகுதி கழக வேட்பாளர் திரு. ஜாண்தங்கம், கடையல், திருஇருதய நடுநிலைப்பள்ளி - சேலம் தொகுதி கழக வேட்பாளர் திரு. V. பன்னீர்செல்வம், பொன்னாம்மாபேட்டை, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி - ஈரோடு தொகுதி கழக வேட்பாளர் திரு. செல்வகுமார சின்னையன், திண்டல் அரசு உயர்நிலைப்பள்ளி - கோவை தொகுதி கழக வேட்பாளர் திரு. A.P. நாகராஜன், கோவில்பாளையம், சர்கார் சாமக்குள நடுநிலைப்பள்ளி - பொள்ளாச்சி தொகுதி கழக வேட்பாளர் திரு. C. மகேந்திரன், உடுமலை அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர்.

நீலகிரி தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் C. கோபாலகிருஷ்ணன் குன்னூர் மவுண்ட் ப்ளசன்ட் வாக்குச்சாவடியிலும் - பெரம்பலூர் தொகுதி கழக வேட்பாளர்திரு. R.P. மருதைராஜ் என்கிற மருதராஜா, ரெங்கநாதபுரம் ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் - சிதம்பரம் தொகுதி கழக வேட்பாளர் திரு. மா. சந்திரகாசி, பெருமத்தூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியிலும் - திருவண்ணாமலை தொகுதி கழக வேட்பாளர் திருமதி. R. வனரோஜா, செங்கம் நகர் துக்காப்பேட்டை சகாயமாதா மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும் வாக்களித்தனர்.

மதுரை தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. இரா. கோபாலகிருஷ்ணன், பார்க்டவுன் வாக்குச்சாவடி - சிவகங்கை மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. பி.ஆர். செந்தில்நாதன், நாகாடி கிராம வாக்குச்சாவடி - விருதுநகர் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. D. ராதாகிருஷ்ணன், சாட்சியாபுரம் C.M.S. பள்ளி வாக்குச்சாவடி - ராமநாதபுரம் தொகுதி கழக வேட்பாளர் திரு. அ. அன்வர்ராஜா, ராமநாதபுரம், தனியார் பள்ளி வாக்குச்சாவடி - அரக்கோணம் தொகுதி கழக வேட்பாளர் திரு. கோ. அரி, திருத்தணியில் உள்ள முருகப்பா நகர் அரசு பள்ளி வாக்குச்சாவடி - தூத்துக்குடி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. ஜெயசிங் தியாராஜ் நட்டர்ஜி, தெர்மல் நகர் பள்ளி வாக்கச்சாவடி ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. M.V. ஓமலிங்கம், காரைக்காலில் உள்ள கோட்டுச்சேரி வ.உ.சி. மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00