கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபரை கேரளாவில் கைது - கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

Aug 1 2014 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபரை கேரளாவில் கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில், 58 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் 168 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சு முகமது, மலப்புரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சோதனை நடத்திய போலீசார், குஞ்சு முகமதுவை கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்பு கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் தாளாளர் அதிசயராஜிற்கும், நாகர்கோவில் இடலாக்குடியைச் சேர்ந்த ஜபருல்லாகான் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் - வாங்கல் காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், ஜபருல்லாகான், நண்பர்களுடன் சேர்ந்து, அதிசயராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, நாகர்கோவில் நேசமணி காவல்நிலையத்தில் அதிசயராஜ், அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஜபருல்லாகானை கைது செய்தனர். மேலும், தலைமறைவான அவரின் நண்பர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00