சர்வதேச சதுப்பு நிலக்காடுகள் தினம் : உலகம் முழுவதும் இன்று கடைபிடிப்பு

Jul 26 2013 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக சதுப்பு நிலக் காடுகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பூமியை காக்கும் கேடயமாக திகழும் சதுப்பு நிலக்காடுகளின் பெருமையை பறைசாற்றும் விதமாக இந்த நாள் அமைகிறது.

பூமிக்குள் ஏராளமான பொக்கிஷங்கள் புதைந்து கிடப்பதைப்போல, அதன் மேற்பரப்பிலேயே காணப்படும் மற்றொரு பொக்கிஷம்தான் காடுகள்... பூமியிலிருந்து வெளியேற்றப்படும் கரியமிலவாயு அனைத்தையும் கிரகித்துக்கொண்டு, உயிரினங்களுக்கு தேவையான ஆக்சிஜனை காடுகள் அள்ளி வழங்குவதால், அவற்றை பூமியின் நுரையீரல் என்றே அழைக்கலாம்... அந்த வகையில், மாங்ரோ காடுகள், அலையாத்திக்காடுகள் என்று அழைக்கப்படும் சதுப்பு நிலக்காடுகளும் பல்வேறு மகத்துவங்களை கொண்டதாக உள்ளன. இவற்றை அழியாமல் பாதுகாத்திடவும், இக்காடுகளின் பெருமையை உலகறியச் செய்திடவும், ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி உலக சதுப்பு நிலக் காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கடலையொட்டிய பகுதிகளில் வரிசையாக அணிவகுத்து, அடர்ந்து காணப்படும் மரங்களின் கூட்டமே சதுப்பு நிலக் காடுகளாக காட்சி தருகின்றன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு இடங்களில் அழகு மிளிரும் இக்காடுகள் அமைந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் இந்த வகை காடுகளுக்கு பிரசித்தி பெற்றதாகும். சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து கேடயமாக காத்து நிற்கும் சிறப்பு, அலயாத்தி காடுகளுக்கு மட்டுமே உண்டு. வருங்கால சந்ததியினருக்கு பூமியை பத்திரமாக விட்டுச் செல்லவும், எதிர்வரும் தலைமுறையினர் கண்டுகளிக்கவும், அலயாத்திக் காடுகளை பொக்கிஷமாய் பாதுகாப்போம் என, சதுப்பு நிலக்காடுகள் தினமான இந்நாளில் உறுதியேற்போம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ADUKALAM - Jayaplus

  Sun : 19:00

 • REEL PETTI - Jaya Plus

  Sat : 18:00

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00