கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களின் வேளாண் சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு : ஒரு லட்சத்து, 32 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

Sep 22 2014 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி கடலூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, உரியநேரத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, அம்மாவட்ட விவசாயிகள், தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வந்த வேண்டுகோளினை ஏற்று, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசனப் பகுதிகளின் சாகுபடிக்காக, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

முதலமைச்சரின் ஆணையின்படி, கீழணையில் இருந்து நேற்றுகாலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர்கள் திரு. M.C. சம்பத், திரு. K.A. ஜெயபால் மற்றும் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், கடலூர் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இதேபோல், வீராணம் ஏரியில் இருந்தும் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. எம்.சி. சம்பத் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.

ஒரு லட்சத்து 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், உரியநேரத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கடலூர், தஞ்சை, நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00