நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி மக்களவைத் தொகுதிகளில் கழக வேட்பாளர்களை ஆதரித்து அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையே எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்

Apr 18 2014 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியில் "வளமான வல்லரசு, வலிமையான நல்லரசு" அமையவேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், கழக வேட்பாளர் திரு. K. அசோக்குமாரை ஆதரித்தும், தருமபுரி மக்களவைத் தொகுதியில் கழக வேட்பாளர் திரு. P.S.மோகனை ஆதரித்தும் நேற்று, அலைகடலென திரண்டிருந்த மக்களிடையே எழுச்சிப் பேருரையாற்றி, வாக்கு சேகரித்தார். இவ்விரு தொகுதிகளிலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பொதுமக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் லட்சக்கணக்கில் திரண்டு நின்று எழுச்சிமிகு வரவேற்பளித்தனர்.

காவேரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்த காங்கிரஸ், தி.மு.க., பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை படுதோல்வியடையச் செய்து, டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்ற சூளுரையோடும், "40-ம் நமதே" என்ற வெற்றி முழக்கத்தோடும், சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, தமது தேர்தல் பிரச்சாரத்தில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட, வரட்டணப்பள்ளி மெயின்ரோடு, பூசாரிப்பட்டி கூட்டு ரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த, கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுச்சிப் பேருரையாற்றி, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. K. அசோக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கிருஷ்ணகிரிக்கு வருகைதந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அமைச்சர் திரு. K.P.முனுசாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் திரு. புரசை கோ.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கிருஷ்ணமூர்த்தி, திருமதி. மனோரஞ்சிதம் மற்றும் ஒன்றியக்குழுத் தலைவர் திரு. கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர் திரு. ரமேஷ், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. K.அசோக்குமார், கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க. செயலாளர் திரு. வ.புகழேந்தி ஆகியோர் மலர்க் கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லும் வழிநெடுகிலும், சாலையின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்துடன் திரண்டு நின்று கரவொலி எழுப்பி, முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி கிருஷ்ணகிரி பகுதி முழுவதும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடை அருகே காவேரிப்பட்டணம் அருள்மிகு கோட்டை பெருமாள் திருக்கோவில், ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவில், அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில், பெண்ணேஸ்வர மடம் அருள்மிகு ஈஸ்வரர் திருக்கோவில் மற்றும் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில் சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மேடையைச் சுற்றிலும் அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் எழுந்துநின்று, உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். அவர்கள் அனைவரையும் பார்த்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தைக் குறிக்கும் வகையில், இரண்டு விரல்களை உயர்த்திக் காண்பித்து, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கில் திரண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, எழுச்சிப் பேருரையாற்றி, கழக வேட்பாளர் திரு. K.அசோக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, நிறைவேற்றியுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விளக்கமாக எடுத்துரைத்ததுடன், மக்களைப் பற்றியே, சதா சர்வகாலமும் சிந்தித்துக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம், இந்தியாவிலேயே அ.இ.அ.தி.மு.க.தான் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார். வரும் மக்களவைத் தேர்தலில், கழக வேட்பாளர்களுக்கு, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து, மகத்தான வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பொதுக்கூட்ட மேடையில், தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்து 854 பேர், அவரவர் கட்சிகளிலிருந்து விலகி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி, வாழ்த்தி வரவேற்றார்.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு. விஜயகுமார் மற்றும் இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புரட்சி பாரதம், இந்திய தேசிய லீக், இந்தியன் யூனியன் காயிதே மில்லத் லீக், அகில இந்திய தேசிய லீக், இந்திய தேசிய முஸ்லிம் லீக், தமிழ் மாநில முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை நிறைவு செய்து, தருமபுரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் தளத்திற்குச் சென்றபோது, அங்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் தங்கள் கரங்களை அசைத்து, மகிழ்ச்சியை தெரிவித்தனர். திடலின் நாலாபுறமும், தமது வாகனத்தில் வலம் வந்தபடியே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைப் பார்த்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தைக் குறிக்கும் வகையில், இரு விரல்களை உயர்த்திக் காண்பித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தருமபுரி வரவேற்பு

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமது சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் நேற்று கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து, தருமபுரி மக்களவைத் தொகுதியில் அலைகடலென திரண்டிருந்த மக்களிடையே எழுச்சிப் பேருரையாற்றி, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. P.S. மோகனுக்கு ஆதரவாக, வாக்கு சேகரித்தார். பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று, முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பளித்தனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெ. ஜெயலலிதா, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எழுச்சிப் பேருரையாற்றியதைத் தொடர்ந்து, தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தருமபுரி-பென்னாகரம் சாலை மோம்பாலம் அருகில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையே எழுச்சிப் பேருரையாற்றி, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. P.S. மோகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக தருமபுரி தொகுதிக்கு வருகைதந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அமைச்சர்கள் திரு. V.செந்தில்பாலாஜி, திரு. P. பழனியப்பன், திரு. எடப்பாடி K. பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. K.P. அன்பழகன், தருமபுரி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திரு. T.R.அன்பழகன், நகர கழகச் செயலாளர் திரு. குருநாதன், ஒன்றியக் கழக செயலாளர் திரு. A. கோவிந்தசாமி, மாவட்ட பால்வள ஒன்றிய முன்னாள் தலைவர், திரு. T.K. ராஜேந்திரன், தருமபுரி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. P.S. மோகன் ஆகியோர் மலர்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லும் வழிநெடுகிலும், சாலையின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்துடன் திரண்டு நின்று கரவொலி எழுப்பி, முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி தருமபுரி முழுவதும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொதுக்கூட்ட மேடை அருகே, தருமபுரி அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவில், அருள்மிகு ஈஸ்வரன் கோவில், குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், அதியமான்கோட்டை அருள்மிகு காலபைரவர் திருக்கோவில் மற்றும் சேலம் மேச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பொதுக்கூட்ட மேடைக்கு வருகைதந்த முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, லட்சக்கணக்கில் அலைகடலென திரண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைப் பார்த்து, வெற்றிச் சின்னமாம், இரட்டை இலைச் சின்னத்தை குறிக்கும் வகையில், இருவிரல்களை உயர்த்திக் காண்பித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொதுக்கூட்ட மேடையைச் சுற்றிலும் அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, எழுச்சிப் பேருரையாற்றி, கழக வேட்பாளர் திரு. P.S. மோகனுக்கு ஆதரவு திரட்டினார். தருமபுரி மக்களவைத் தொகுதியில், தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, நிறைவேற்றியுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விளக்கமாக எடுத்துரைத்தார். மக்களவைத் தேர்தலில், வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து, மகத்தான வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பின்னர், பொதுக்கூட்ட மேடையில், தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 900 பேர், அவரவர் கட்சிகளிலிருந்து விலகி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில் தங்களை அ.இ.அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி, வாழ்த்தி வரவேற்றார்.

தருமபுரி தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் திரு. தனியரசு, எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. வேல்முருகன், கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. Best ராமசாமி, படையாட்சியார் பேரவையின் நிறுவனத் தலைவர் திரு. ராமதாஸ், இந்திய குடியரசு கட்சியின் R.S. கவாய் அமைப்பின் மாநிலத் தலைவர் திரு. கரியமால், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. சின்னசாமி, தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. இனமுரசு கோபால் மற்றும் இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், இந்திய தேசிய லீக், இந்தியன் யூனியன் காயிதே மில்லத் லீக், அகில இந்திய தேசிய லீக், இந்திய தேசிய முஸ்லிம் லீக், தமிழ் மாநில முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எழுச்சிப் பேருரையாற்றிய பின்னர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஹெலிகாப்டர் தளத்திற்கு திரும்பியபோது, அங்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் தங்கள் கரங்களை அசைத்து, மகிழ்ச்சியை தெரிவித்தனர். திடலின் நாலாபுறமும், தமது வாகனத்தில் வலம் வந்தபடியே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைப் பார்த்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தைக் குறிக்கும் வகையில், இரு விரல்களை உயர்த்திக் காண்பித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தருமபுரி பேருரை

இந்தியாவிலேயே, சதா சர்வகாலமும் மக்களைப் பற்றியே சிந்திக்கின்ற ஒரே இயக்கம் அ.இ.அ.தி.மு.க.தான் என முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே குஜராத் தான் முதன்மையான மாநிலம் என்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், வெற்றுப் பேச்சு, விளம்பர வெளிச்சம் இல்லாமல், மக்களுக்கு தொண்டாற்றுவதே தமது குறிக்கோள் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி என்ற சூளுரையுடன், சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதியில் நேற்று, லட்சோப லட்சம் மக்கள் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் எழுச்சிப் பேருரையாற்றினார். தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடு, மென்பொருள் ஏற்றுமதி, பொது விநியோகத் திட்டம், உணவு தானிய உற்பத்தி உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் குஜராத்தை விட தமிழகம் முன்னணியில் உள்ளது என, புள்ளி விவர ஆதாரங்களுடன், முதலமைச்சர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

நதிகள் இணைப்புத் திட்டத்திற்குத் தேவைப்படும் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை பாரதிய ஜனதா அளிக்கத் தயாரா? - காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை எவ்விதத் தடையுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை அக்கட்சி அளிக்க முடியுமா? என முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அப்போது அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்தார்.

கழகத்தில் இணைந்தனர்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் K. அசோக்குமாரை ஆதரித்தும், தருமபுரி மக்களவைத் தொகுதியில், கழக வேட்பாளர் திரு. P.S. மோகனை ஆதரித்தும், நேற்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இவ்விரு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த, 4 ஆயிரத்து 754 பேர், அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வாழ்த்து தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி தொகுதியின் பொதுக்கூட்ட மேடையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு. வி. வெங்கடேஷ், தலைமை நிலையச் செயலாளர் திரு. K.K. ராஜன், ஊத்தங்கரை ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திரு. செல்வராஜ், ஒசூர் நகர மன்ற 2-வது வார்டு உறுப்பினர் திரு. ஏ. ஸ்ரீதர், தே.மு.தி.க-வைச் சேர்ந்த ஓசூர் நகர மன்ற 14-வது வார்டு உறுப்பினர் திரு. எம். ரமேஷ், தி.மு.க.வைச் சேர்ந்த ஓசூர் நகர மன்ற 10-வது வார்டு முன்னாள் உறுப்பினர் திரு. குமார், உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி வரும் ஓசூர் நகர மன்ற 28-வது வார்டு உறுப்பினர் திருமதி. ரோஜா பாண்டியன், 16-வது வார்டு உறுப்பினர் திரு. என். வெங்கட்ட ரெட்டி, 11-வது வார்டு உறுப்பினர் திரு. ஜி. ரமேஷ்பாபு உள்ளிட்ட ஆயிரத்து 854 பேர், அவரவர் கட்சிகளில் இருந்து விலகி, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

தாயுள்ளத்தோடு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவுக்கு, அவர்கள் அனைவரும் தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை I.N.T.U.C. பொதுச் செயலாளர் திரு. வி. மனோகரன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் திரு. பயாஸ் அகமது, தருமபுரி மாவட்ட ம.தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் திரு. பி. ராஜா, புதிய நீதிக் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் திரு. பி. அசோகன், பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. எஸ். முத்து, அரூர் பேரூராட்சி செயலாளர் திரு. ஆர். சரவணன், தே.மு.தி.க-வைச் சேர்ந்த, தருமபுரி மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி H. லட்சுமி, தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் திரு. கே.எஸ். மனோகரன், மொரப்பூர் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் திருமதி. விஜயலட்சுமி பொன்னுசாமி, பாலக்கோடு ஒன்றியம், சின்ன குட்லானஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சுமித்ரா, பென்னாகரம் பேரூராட்சி செயலாளர் திரு. அசோக்குமார், தி.மு.க-வைச் சேர்ந்த மொரப்பூர் ஒன்றியம், சாமண்டஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. சுதா அன்பழகன், காரியமங்கலம் ஒன்றியம், கெண்டிகான ஹள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு. ஏ. ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி ஒன்றியம், கோணங்கிநாயக்கன ஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. மல்லிகா கிருஷ்ணன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. S.R. தனசேகர் மற்றும் காரியமங்கலம் ஒன்றியக் குழு 7-வது வார்டு சுயேட்சை உறுப்பினர் திருமதி. ஈஸ்வரி பெருமாள், உள்ளிட்ட 2 ஆயிரத்து 900 பேர், அவரவர் கட்சிகளில் இருந்து விலகி அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

தாயுள்ளத்தோடு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, அவர்கள் அனைவரும் தெரிவித்துக் கொண்டனர்.

ஹெலிகாப்டர் சோதனை

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதிகளில், சூறாவளி தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பயணம் செய்த ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்றும் சோதனை நடத்தினர். தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சோதனை இடப்பட்டதை முதலமைச்சர் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, முழு ஒத்துழைப்பு நல்கினார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, நாடுமுழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதிகளில், முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா நேற்று சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் அடங்கிய வரட்டணப்பள்ளி மெயின்ரோடு, பூசாரிப்பட்டி கூட்டு ரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நடவடிக்கைகளை அவர்கள் வீடியோ படமாகவும் எடுத்தனர்.

கிருஷ்ணகிரி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து தருமபுரி மக்களவைத் தொகுதியில், தருமபுரி-பென்னாகரம் சாலை மேம்பாலம் அருகே நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பங்கேற்று எழுச்சிப்பேருரையாற்றினார். தருமபுரியிலும் முதலமைச்சர் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையை அவர்கள் வீடியோ படமாகவும் எடுத்தனர்.

தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தாம் பயணம் செய்த ஹெலிகாப்டர் சோதனை இடப்பட்டதை அறிந்த முதலமைச்சர், இன்முகத்தோடு அதனை ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் இந்த பெருந்தன்மையான செயல்பாட்டுக்கு அங்கு கூடியிருந்த மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
செய்தி வீடியோ


சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00