தூத்துக்குடி மாநகர மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் - அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் முதலமைச்சர் ஜெயலலிதா : லட்சோபலட்சம் பொதுமக்களும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் எழுச்சிமிகு வரவேற்பு

Sep 16 2014 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியில், அலைகடலென திரண்டிருந்த பொதுமக்களிடையே நேற்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அடுக்கடுக்கான மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பொதுமக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் லட்சக்கணக்கில் பேரார்வத்துடன் திரண்டு வந்து பிரமாண்ட வரவேற்பு அளித்ததுடன், முதலமைச்சருக்கு தங்கள் பேராதரவையும் தெரிவித்தனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளின் மேயர் பதவி உட்பட, உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி, கோயம்புத்தூர் ஆகிய மாநகராட்சிகளில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் திருமதி. A.P.R. அந்தோணி கிரேஸியை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, நேற்று நண்பகல் சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முதலமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, விமானம் மூலம் மதுரைக்குச் சென்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மதுரை மேயர், மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

பின்னர், மதுரையிலிருந்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அமைச்சர்கள் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், திரு. எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் கழக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. சசிகலா புஷ்பா, மீனவரணி இணைச் செயலாளர் ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். மேலும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் தூத்துக்குடி நகர செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான கழக வேட்பாளர் திருமதி. அந்தோணி கிரேஸி ஆகியோரும் முதலமைச்சருக்கு பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து பிரச்சாரப் பகுதிக்கு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா சென்றபோது, ஹெலிகாப்டர் தளத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கைகளை அசைத்து உற்சாகப் பெருக்கோடு முதலமைச்சரை வரவேற்றனர். பின்னர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில், ஆலய தக்கார் திரு. கோட்டை மணிகண்டன் தலைமையில், திரிசுதந்திரர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பூரணகும்ப மரியாதை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரச்சார வாகனம் மூலம், பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார். முதலமைச்சரை வரவேற்கும் வகையில், சாலையின் இருமருங்கிலும் பேனர்கள், அலங்கார தோரணங்கள், அலங்கார வளைவுகள், வரவேற்பு பதாகைகள், தோரணக்கொடிகள், பிரம்மாண்ட பலூன்கள் மற்றும் செயற்கை யானைகள் என தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்க, பல்வேறு இசைக்கருவிகள் முழங்க முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வழிநெடுகிலும் கழக மகளிர் அணியினர் முளைப்பாரி ஏந்தி முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். சாலையின் இரு மருங்கிலும், அலைகடலென பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு உணர்ச்சி பொங்க வரவேற்பு அளித்தனர். மேலும், புலிவேஷமிட்ட கலைஞர்கள் புலியாட்டமிட்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பிரச்சாரம் நடைபெறும் இடமான தூத்துக்குடி அண்ணாநகர் பகுதிக்கு வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கழக வேட்பாளர் திருமதி. A.P.R. அந்தோணி கிரேஸியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து, V.V.D. சிக்னல், பழைய பேருந்து நிலையம் வழியாக சென்ற முதலமைச்சர், சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த பொதுமக்களிடையே, இரண்டை இலைச் சின்னத்தைக் குறிக்கும் விதமாக தமது இரு விரல்களைக் காட்டி வாக்கு சேகரித்த வண்ணம், குரூஸ்ஃபெர்ணான்டோ சிலையை அடைந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களிடையே, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எழுச்சிப் பேருரையாற்றி கழக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

பின்னர், தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் 1-ஆம் கேட் காந்திசிலை, மட்டக்கடை ரோடு வழியாக, திரேஸ்புரம் பகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக, மட்டக்கடை ரோடு என்ற இடத்தில் அமைந்துள்ள பேட்ரிக் சர்ச் முன்பு, தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில், திரு. ஜேசு சகாயம் தலைமையில் கிறிஸ்தவ பெருமக்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்து, தமிழகத்தில் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு முதலமைச்சர் செய்து கொடுத்துள்ள பல்வேறு உதவிகள் மற்றும் முதலமைச்சர் ஆட்சியில் நிகழ்த்தப்பட்டு வரும் பல்வேறு சாதனைகளுக்கு நன்றிதெரிவித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான நல்லாட்சி தொடரவும், முதலமைச்சர் பூரண நலமுடன் வாழவும், ஒவ்வொரு நாளும் இறைவனிடம் ஜெபித்து வருவதாகவும், கழக வேட்பாளர் திருமதி. அந்தோணி கிரேஸிக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் தமது நன்றியினை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கன் மருத்துவமனை அருகே, செல்வநாயகபுரத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களின் முழக்கங்களுக்கு இடையே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கழக கொடியை ஏற்றிவைத்தார். இதனைத்தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் வழியாக சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களிடையே இரு விரல்களைக் காட்டி வாக்கு சேகரித்த வண்ணம் பிரச்சாரத்தை நிறைவு செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மதுரை வந்து பின்னர் சென்னை திரும்பினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00