இலங்கை ராணுவ அமைச்சகத்தின் அவதூறு கட்டுரை தொடர்பாக அந்நாட்டு தூதரை அழைத்து, இந்தியாவின் அதிருப்தி மற்றும் வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள்

Aug 2 2014 10:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை ராணுவ அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அவதூறு கட்டுரை தொடர்பாக, டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து, இந்தியாவின் அதிருப்தியையும், வருத்தத்தையும் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த அவதூறு கட்டுரை தொடர்பாக இலங்கை அரசிடம் இருந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிரதமர் திரு.நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை ராணுவம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் "How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?" என்ற தலைப்பின்கீழ் படத்துடன் ஒரு அவதூறு கட்டுரையை வெளியிட்டிருப்பது தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்- இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள படம் மிகவும் ஆட்சேபகரமாக அமைந்துள்ளது. பாரதப் பிரதமரையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் சிறுமைப்படுத்தும் வகையிலும், அவதூறாகவும், அவமரியாதை செய்யும் வகையிலும் இது அமைந்துள்ளது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும்போது, அவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி துன்புறுத்தும் சம்பவங்கள் குறித்து தாம் தொடர்ச்சியாக எழுப்பி வரும் மிகவும் கடுமையான பிரச்னைகள் குறித்து இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள இக்கட்டுரையில், சில தேவையற்ற உண்மைக்கு புறம்பான கருத்துகள் இடம்பெற்றுள்ளன- தமது மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான இப்பிரச்னை குறித்து தாம் வலியுறுத்தி வந்துள்ளதாகவும், தொடர்ந்து கடுமையாக வலியுறுத்தப்போவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்- 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்கீழ் கச்சத்தீவு சட்டவிரோதமாக இலங்கைக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டதை தமிழக அரசு அங்கீகரிக்க மறுத்து வருவதற்கான சட்டப்பூர்வ அடிப்படையினை தாம் தெளிவாக விளக்கியுள்ளதாகவும், சர்வதேச கடல் எல்லையை வகுத்திருப்பதையும் ஆட்சேபித்துள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்தக் கட்டுரையில் தமக்கு இவ்விவகாரத்தில் உள்நோக்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வன்மையாக கண்டித்துள்ளார். மீனவர்களின் குடும்பங்கள் உயிர்வாழ அத்தியாவசியமான அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என தாம் வலியுறுத்தி வருவதற்கு உள்நோக்கம் கற்பித்து, இந்தப் படகுகளில் சில, தமக்கோ அல்லது தமது ஆதரவாளர்களுக்கோ சொந்தமாக இருப்பதால்தான் தாம் இவ்வாறு வலியுறுத்துவதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது- இது தீய நோக்கம் கொண்ட ஆதரமற்ற குற்றச்சாட்டாகும்- "தமிழக முதலமைச்சர் பாரதப் பிரதமரின் செல்வாக்கை குறைக்க முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது" என கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் மூலம் இந்திய கூட்டாட்சி முறையில் பிளவை ஏற்படுத்த இந்த கட்டுரை விஷமத்தனமாக முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

முழுமையான பத்திரிகை சுதந்திரம் உள்ள ஒரு துடிப்புமிக்க ஜனநாயகத்தில், பொதுவாழ்வில் உள்ளவர் என்ற முறையில் தாம் பல்வேறு தரப்பிலும் இருந்து எண்ணற்ற விமர்சனங்களையும், கருத்துகளையும் தாம் எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழக மீனவர்களின் மிக முக்கியமான வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வுகாண ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் மேற்கொண்டு வரும் ஓய்வற்ற முயற்சிகளை கேலி செய்யும் விதத்திலும், சிறுமைப்படுத்தும் வகையிலும் அண்டை நாட்டின் ஒரு முக்கிய அமைச்சகத்தால், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுபோன்ற எதிர்ப்புமிக்க கட்டுரை வெளியிடப்பட்டிருப்பது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டுள்ளார் - அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள படம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் புகழுக்கு அவதூறு விளைவிக்கும் நோக்கில், குறிப்பாக, பல ஆண்டுகள் புகழ்மிக்க அரசியல் தலைவராக விளங்கிவரும், 66 வயதான ஒரு பெண்ணின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கிலேயே வெளியிடப்பட்டுள்ளது - இலங்கை அரசின் இத்தகைய செயல் இந்தியாவுக்கே ஏற்பட்டுள்ள இகழ்ச்சி என்பதால், இதனை புறக்கணிக்கவோ அல்லது எளிதாக எடுத்துக்கொள்ளவோ முடியாது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணையதளத்தின் கருத்து பக்கத்தில் ஏராளமானோர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதில் கண்டுள்ள படத்தில் பாரதப் பிரதமரையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் சேர்த்திருப்பதானது அது கட்டுரையின் ஒரு பகுதி அல்ல என்றும், வேண்டுமென்றே விஷமத்தனமாக இந்தப் படம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது - கண்டனத்துக்குரிய இந்தப் படம், இது கட்டுரையாளரின் கருத்து அல்ல என்றும், இலங்கை அரசின் கருத்து என்பதையும் தெளிவுப்படுத்துகிறது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் பொதுமக்களிடையே எழுந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து, அந்தக் கட்டுரையும், கருத்துப்படமும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஓசையின்றி நீக்கப்பட்டுள்ளதாக அறிவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஆனால், இதன் பாதிப்பு ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தியாவுக்கான இலங்கை தூதரை மத்திய வெளியுறவு அமைச்சகம், உடனடியாக நேரில் அழைத்து இலங்கை அரசின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிப்பித்த கட்டுரை குறித்து இந்தியாவின் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் - மேலும், இலங்கை அரசிடம் இருந்து நிபந்தனையற்ற மன்னிப்பையும் இந்தியா கோர வேண்டும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00