முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பணிந்தது இலங்கை அரசு - முதலமைச்சர் மற்றும் பிரதமரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது

Aug 2 2014 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில், தமிழக முதலமைச்சர் மற்றும் பாரதப் பிரதமர் குறித்து வெளியிடப்பட்ட அவதூறு கட்டுரை தொடர்பாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, கொழும்புவில் உள்ள இந்தியத் தூதர், இலங்கை அரசிடம் நேரில் சென்று இந்தியாவின் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் பிரதமரிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.

இலங்கை கடற்படையால் அத்துமீறி சிறைபிடிக்கப்படும், தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, இந்திய பிரதமருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதிவருவது தொடர்பாக, இலங்கை ராணுவம் மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில், அவதூறு கட்டுரை, கருத்துப்படத்துடன் வெளியிடப்பட்டது. இந்த கட்டுரைக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன், அதில், இலங்கைத் தூதரை நேரில் அழைத்து இந்தியாவின் அதிருப்தி மற்றும் கண்டனத்தை வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை மேற்கொண்ட உடனடி நடவடிக்கை காரணமாக, கொழும்புவில் உள்ள இந்திய தூதர், இலங்கை அரசிடம் இப்பிரச்னை தொடர்பாக, இந்தியாவின் கடும் கண்டனத்தை தெரிவித்தார். இதுதவிர, சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியானதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்ததுடன், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதால், இலங்கை அரசு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடமும், பிரதமர் திரு. நரேந்திர மோதியிடமும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. இலங்கையின் ராணுவ அமைச்சக இணையதளத்தில் வெளியான அவதூறு செய்தியும் நீக்கப்பட்டது என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் திரு. சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00