சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் - தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கவும் உத்தரவு

Sep 2 2014 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நேரிட்ட பல்வேறு சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டம், கோ. அபிஷேகபுரம் கிராமம் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஈகை பகுதியைச் சேர்ந்த திரு. விக்டர் அலெக்ஸாண்டர் என்பவரின் மகன் எடிசன் அமிர்தராஜ்;

கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிந்தாமணி கிராமம், அண்ணாமலை நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மேலசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த திரு. கருப்புசாமி என்பவரின் மகன் சுந்தரமூர்த்தி;

கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவாசி கிராமம், சேலம் பிரதான சாலையில் ஆட்டோவில் பயணம் செய்த பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த திரு. கனகராஜ் என்பவரின் மகன் தினேஷ்குமார்; திரு. வீராசாமி என்பவரின் மகன் பாலு;

கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு கிராமம், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த திரு. கைலாசம் என்பவரின் மகன் தர்மலிங்கம்;

கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், நகர் கிராமம் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த செம்மணங்கூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாயவன் என்பவரின் மகன் நடேசன்; ஆகியோர் அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூர் பகுதி, நெய்குளம் கிராமம் அருகே, திருச்சிராப்பள்ளி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த திரு. நந்தக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயும், திரு. பழனியப்பன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி ஈரோடு மாவட்டம், கங்காபுரம் கிராமம், அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அரசுப் பேருந்து மோதியதில், தனியார் பேருந்திலிருந்த சித்தோடு, குட்டை தயிர்பாளையம் பகுதியைச் சேர்ந்த திரு. ராமன் என்பவரின் மகன் கிட்டுசாமி, அரசுப் பேருந்தில் பயணம் செய்த சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகள் சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சுங்கான்கடை, தோட்டியோடு அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து நிலைத் தடுமாறி அருகிலிருந்த குளத்தில் விழுந்ததில் விளவங்கோடு வட்டம், விழுந்தயம்பலத்தைச் சேர்ந்த திரு. ராமகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரமடைந்ததாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்த துயர சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00