ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை திபிகா பல்லிகலுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து - 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு

Sep 23 2014 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை Dipika Pallikal-க்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையையும் அறிவித்துள்ளளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெறுபவருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, கடந்த 2011-ம் ஆண்டு, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவின் Incheon நகரில் நடைபெற்று வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான ஸ்குவாஷ் போட்டியில், தமிழக வீராங்கனை Dipika Pallikal வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தனது வாழ்த்துச் செய்தியில், இந்திய நாட்டிற்கும், தமிழகத்திற்கும், Dipika Pallikal பெருமை சேர்த்திருப்பதாகவும், தமிழக மக்கள் சார்பில், தமது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெண்கலப் பதக்கம் வென்ற Dipika-வுக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதேபோன்று மேலும் பல சாதனைகளை படைத்து, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்றும் தமது வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00