பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைத்துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 127 பேருக்கு "தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்" : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

Sep 16 2014 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழக காவல்துறை, தீயணைப்பு-மீட்புப் பணித்துறை, சிறைத்துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 127 பேருக்கு, "மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்" வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு-மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருவதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, காவல்துறையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முதல், தலைமைக் காவலர் நிலை வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் துணை இயக்குநர் முதல், தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் துணை சிறைஅலுவலர் முதல், முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில், 5 அலுவலர்களுக்கும், காவல்துறை விரல்ரேகைப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் - ஆக மொத்தம் 127 பேருக்கு, அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில், "மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்" வழங்கிட முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர்தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி ஒட்டு மொத்த மானியத் தொகையும், வெண்கலப் பதக்கமும் வழங்கப்படும். பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பங்கேற்கும் சிறப்பு விழாவில், பதக்கங்கள் வழங்கப்படும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00