மிகக்குறைந்த விலையில் தரமான, சுகாதாரமான உணவு வழங்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அம்மா உணவகங்களை, ஆந்திர அமைச்சர்கள் மீண்டும் பார்வையிட்டு பாராட்டு

Sep 20 2014 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சுகாதாரம் மிக்க, தரமான உணவு வகைகளை மிகக்குறைந்த விலையில், ஏழை-எளிய மக்களுக்கு வழங்க சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தி வரும் "அம்மா உணவகங்களுக்கு" பாராட்டும் வரவேற்பும் குவிந்த வண்ணம் உள்ளன. ஆந்திர மாநில அமைச்சர்கள் மீண்டும் "அம்மா உணவகத்தை" நேற்று நேரில் பார்வையிட்டு, பாராட்டு தெரிவித்ததுடன், வரும் நவம்பர் மாதம் இதுபோன்ற மலிவுவிலை உணவகங்கள் ஆந்திர மாநிலத்தில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஏழை-எளிய மக்கள் வயிறார உண்ணும் வகையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட தரமான உணவு வகைகள், மலிவு விலையில் "அம்மா உணவகங்கள்" மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. "அம்மா உணவகங்களில்" வழங்கப்படும் உணவு மற்றும் அவற்றை தயாரிக்கும் முறை, பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களை, பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் நேரில் கண்டு வியந்து, பாராட்டி வருகின்றனர். மேலும், இதுபோன்ற உணவகங்களை தங்கள் பகுதிகளிலும் தொடங்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநில அமைச்சர்கள் பரிதலா சுனிதா, டாக்டர் பி. நாராயணா, திரு. புல்லாராவ் மற்றும் நெல்லூர் மாநகர மேயர் அப்துல்அஜீஸ் உள்ளிட்டோர் சாந்தோம் மற்றும் அரசு தலைமை பொது மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகங்களை பார்வையிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், வரும் நவம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற மலிவுவிலை உணவகங்கள் தொடங்கப்படும் என தெரிவித்தனர்.

அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, ஏற்கெனவே ஆய்வு செய்ததாகவும், தற்போது மீண்டும் அவற்றை உறுதிபட தெரிந்து கொண்டதாகவும், தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் செயல்முறைகள் தங்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக உள்ளதாகவும் ஆந்திர மாநில அமைச்சர்கள் தெரிவித்தனர். அம்மா உணவகங்களை, ஏற்கெனவே டெல்லி, ராஜஸ்தான், சண்டிகர் மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் வந்து பார்வையிட்டு பாராட்டு தெரிவித்துள்ளனர். எகிப்து நாட்டின் அமைச்சரும் அம்மா உணவகங்களுக்கு ஏற்கெனவே பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00