அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக, முதலமைச்சர் ஜெயலலிதா 7-வது முறையாக தேர்வு - சென்னை உயர்நீதிமன்ற அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டம்

Sep 2 2014 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 7-வது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை, சென்னை உயர்நீதிமன்ற அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, 7-வது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை, தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், கழகத்தின் அனைத்து அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர்கள், நேற்று பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு தலைவர் திரு. சேதுராமன், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் - வழக்கறிஞர் திரு. இன்பதுரை, வடசென்னை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு. எம்.எல். ஜெகன் உட்பட ஏராளமான அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, 7-வது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு, கர்நாடக மாநிலத்தில், கழகச் செயலாளர் திரு. வா. புகழேந்தி தலைமையில், அ.இ.அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கொண்டாடினர். இதில், ஏராளமான கழகத் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00