முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் சந்திப்பு : உலக வங்கி நிதியுதவியுடன், தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் பெருமிதம்

Jul 22 2014 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, உலக வங்கித் தலைவர் Jim Yong Kim சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். உலக வங்கி நிதியுதவியுடன், தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக இச்சந்திப்பின்போது, முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் வெற்றிகரமாகச் செயல்படும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, பொதுவாழ்விலும் வெற்றிகரமானவர் என உலக வங்கித் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, உலக வங்கித் தலைவர் டாக்டர் Jim Yong Kim, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழகம் வந்துள்ள உலக வங்கித் தலைவரையும், அவரது குழுவினரையும், மகிழ்ச்சியுடன் வரவேற்றார். உலக வங்கி உதவியுடன், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்பட்டு வருவதாக இச்சந்திப்பின்போது முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில், பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்து முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா விளக்கமாக எடுத்துரைத்தார்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சியினை அரசு இலக்காக தீர்மானித்து தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ உருவாக்கியது - தமிழக அரசு மாநிலத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறது - பள்ளிகளில் குழந்தைகளும், மாணவ-மாணவிகளும் கல்வி கற்கத் தேவையான அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படுகின்றன - கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், அறிவுப்பூர்வமான தொழில்திறன் பெற்றவர்கள் உள்ள மாநிலமாக தமிழகத்தை உறுதிசெய்துள்ளது - இதுமட்டுமல்லாமல், மாநில அரசு ஏழ்மையை ஒழிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது - பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்றவர்களாக உருவாக அவர்களுக்கு விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன - இந்தத் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் ஏற்றத் தாழ்வுகளையும், ஏழ்மையையும் அறவே நீக்கி, சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தி, மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் தனித்துவம் பெற்று திகழ்கிறது - இதன் விளைவாக, தமிழ்நாடு அறிவுப்பூர்வமான தொழில்திறனுடன் நேர்மையாக பணியாற்றும் திறன்கொண்டவர்களை உள்ளடக்கியதாக, அமைதி பூங்காவாக திகழ்வதால், முதலீடுகளுக்கான மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டார்.

மேலும், சமுதாயத்தில் நிலவிவரும் பெண்களுக்கு எதிரான பாரபட்ச அணுகுமுறைகளை மிகப்பெரிய அளவில் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - குறிப்பாக தொட்டில் குழந்தைத் திட்டம் 1992ல் தொடங்கப்பட்டது - இந்தத் திட்டம் பெண்குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவரத் தொடங்கப்பட்டது - மேலும், பெண்குழந்தைகள் திட்டம், குடும்ப மேம்பாட்டுத்திட்டத்துடன் இணைக்கப்பட்டது - இதன்மூலம் குடும்பங்கள், பெண்குழந்தைகளை விரும்பி வளர்க்கத் தொடங்கினர் - பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பெண்கள் நம்பிக்கையுடன் உதவிக்காக காவல் நிலையங்களை அணுகவும், அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டன என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பொதுவாழ்வில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெற்றிகரமாகவும், மிகச் சிறப்பாகவும் செயல்பட்டு வருவதாகவும் உலக வங்கித்தலைவர் Jim Yong Kim பாராட்டு தெரிவித்தார். தமிழக அரசு, வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்து விளங்குகின்ற அதே நேரத்தில், சமூக வளர்ச்சி குறியீடுகளான, பிறந்த குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது - பிரசவத்தின் போது தாய் உயிரிழக்கும் விகிதத்தை குறைப்பது உள்ளிட்ட அளவீடுகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும், தமிழக அரசு உலக வங்கியின் திட்டங்களையும் மிகச்சிறப்பாக செயல்படுத்திவரும் மாநிலமாக திகழ்கிறது என்றும் உலக வங்கித் தலைவர் பாராட்டினார்.

உலக வங்கியின் திட்டங்கள் தமிழகத்தில் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர், இச்சந்திப்பின்போது Onno Ruhl பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய திட்டங்களுக்கு அடுத்த 12 மாதங்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்தக் கூட்டத்தில், IFC இயக்குநர் Serge Devieux, உலக வங்கி இயக்குநர் டாக்டர் T.V. சோமநாதன், சென்னை மைய மேலாளர் திரு. சுனில் குமார், தமிழக அரசு சார்பில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழக அரசு ஆலோசகர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், திட்டமிடல் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



உலக வங்கி பாராட்டு

உலக வங்கி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கே முன்னோடியாக இருப்பதாக உலக வங்கித் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00