சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில், அம்மா உணவகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா - ராயபுரம், ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் திறப்பு

Sep 22 2014 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று, சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனைக்கு வந்து செல்லும் புற நோயாளிகள், உள் நோயாளிகளின் உடனிருப்போர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "அம்மா உணவகத்தை" குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும், இந்த விழாவில் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் அம்மா உணவகங்களை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி துவக்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சியில் 203 அம்மா உணவகங்கள் ஏழை, எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி மற்றும் பொங்கல் சாம்பார், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 2 சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் ஆகியவை தரமானதாகவும் சுகாதாரமாகவும் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஏழை எளிய மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், முதற்கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், இரண்டாம் கட்டமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்து பொது மக்களிடையே மாபெரும் வரவேற்பினைப் பெற்றுள்ள அம்மா உணவகங்கள் குறித்து செய்தி அறிந்து, இந்தத் திட்டத்தினை தாங்களும் செயல்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் எகிப்து நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளும், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அம்மா உணவகங்களை நேரில் பார்வையிட்டு, அவை செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்து, சிறப்பாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினை பாராட்டியுள்ளனர்.

இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரும் பயனளிக்கும் அம்மா உணவகங்களின் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை வளாகத்தில், மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "அம்மா உணவகத்தை" திறந்து வைக்க வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அமைச்சர்கள் திருமதி எஸ்.கோகுல இந்திரா, டாக்டர் விஜயபாஸ்கர், மேயர் திரு.சைதை சா. துரைசாமி, தலைமைச் செயலாளர் திரு.மோகன்வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலாளர் திரு.பணீந்திரரெட்டி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அம்மா உணவகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பொது மக்களுக்கு உணவு வழங்கி விற்பனையைத் துவக்கி வைத்தார். மேலும், இந்த விழாவில் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து,முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றின் சுவையினை சோதித்து பார்த்தார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுவினரிடம், இங்கு அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளோடு உடனிருப்பவர்களும் உணவு வகைகளை உட்கொள்வதால் அவற்றை மிகுந்த கவனத்துடன் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ். கோகுல இந்திரா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் திரு சைதை சா. துரைசாமி, தலைமைச் செயலாளர் திரு மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன்,, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு க. பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00