முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக மக்கள் எப்போதும் நன்றியோடு நினைப்பார்கள் - வரலாறு ஒருபோதும் மறந்துவிடாது : பிரபல தமிழ் நாளேட்டின் தலையங்கத்தில் பாராட்டு

Jul 21 2014 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

முல்லைப் பெரியாறு அணையை கட்ட உறுதுணையாக இருந்த ஜான் பென்னிகுவிக் என்ற ஆங்கிலப் பொறியாளரின் கனவு வீண் போகாத வகையில், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, வெற்றிக் கனியை பறித்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தமிழக மக்கள் எப்போதும் நன்றியோடு நினைப்பார்கள் என்றும், வரலாறு ஒருபோதும் மறந்துவிடாது என்றும் பிரபல தமிழ் நாளேடான "தினத்தந்தி", தலையங்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில் வறட்சியும், பஞ்சமும் தலைவிரித்தாடியபோது, 1887-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டும் பணியை, ஜான் பென்னிகுவிக் என்ற ராணுவப் பொறியாளரிடம் அன்றைய ஆங்கிலேய அரசு ஒப்படைத்தது. 1890-ல் பெய்த கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட அணையை மீண்டும் கட்டுவதற்கு செலவு அதிகரிக்கவே, ஆங்கிலேய அரசு அந்தப் பணியை கைவிட்டுவிட்டது. ஆயினும், ஜான் பென்னிகுவிக் தன் சொத்துக்களையெல்லாம் விற்று இந்த அணையை கட்டத் தொடங்கினார். அவரது கடும் முயற்சியால் 1895-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டது. தமிழன் நன்றி மறந்தவனாகவும், வரலாற்றை மறந்தவனாகவும் இருந்ததில்லை என்பதால்தான், பெரும் தியாகம் செய்த ஜான் பென்னிகுவிக்கை இன்றளவும் நன்றியோடு நினைவுகூருவதாக பிரபல தமிழ் நாளேடான "தினத்தந்தி"யின் தலையங்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு பதிலாக, 136 அடியாக குறைக்க வேண்டும் என்றும், அணை பலவீனமாக இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு கூறி வந்ததை நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நீண்ட சட்டப்போராட்டங்களுக்கு பின்னர், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 142 அடியாக நீரை தேக்கி வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக அணையின் அடைப்பான்கள் கீழே இறக்கப்பட்டன.

இது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட, தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நீதி என்று சட்டசபையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்ததை, தினத்தந்தி நாளேட்டின் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அணையை கட்ட அன்று உறுதுணையாக இருந்த ஜான் பென்னிகுவிக்கையும், இன்று அவரது கனவு வீண் போகாத வகையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கனியை பறித்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவையும் 5 மாவட்ட மக்கள் எப்போதும் நன்றியோடு நினைப்பார்கள் - வரலாறும் ஒருபோதும் மறந்துவிடாது என்றும் தினத்தந்தி தனது தலையங்கத்தில் பாராட்டியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00