முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் குழந்தைகள் நல விழிப்புணர்வு முகாம்கள் : தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் மருந்து மாத்திரைகள் விநியோகம்

Jul 29 2014 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் செயல்படுத்தி வரும் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் காரணமாக, பிரசவத்தின்போது தாய் இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் ஆகியவை மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வயிற்றுப்போக்கால் ஏற்படும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதன் பேரில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முதலுதவி மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா சுகாதாரத்துறையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக முன்னேற்றி வருகிறார். பிறந்த குழந்தை முதல், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வரை, வயிற்றுப்போக்கால் ஏற்படும் இறப்பைத் தடுத்து நிறுத்த, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதன் பேரில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஆகியவற்றின் சார்பில், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டம் ஸ்ரீரெங்கபுர கிராமத்தில் மருத்துவ விழிப்புணர்வு முகாமை நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு உப்புநீர் கரைசல் மற்றும் மாத்திரைகளை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் அரசவணங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மருத்துவ விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் திரு. ஆர். காமராஜ், குழந்தைகளுக்கான சர்க்கரை உப்பு கரைசல் பாக்கெட்டுகளை தாய்மார்களிடம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற முகாமில் அமைச்சர் திரு. பி. தங்கமணி குழந்தைகளுக்கான தனி சிறப்பு 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் கல்நாசம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் திரு. கே.சி. வீரமணி தொடங்கி வைத்து, உப்புநீர் கரைசல் மற்றும் சத்து மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு முகாமை அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாச்சலம் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்பட்டன.

கோவை, திருப்பூர், விருதுநகரில் நடைபெற்ற முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00