தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் - தோல்வி பயம் காரணமாக பொய்யான புகார் அளித்திருப்பதாக பல்வேறு கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

Apr 23 2014 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தலின்போது முறைகேட்டில் ஈடுபடவிருந்த தி.மு.க.வினரின் முயற்சி தடுக்கப்பட்டுள்ளதால், தோல்வி பயம் காரணமாக இதுபோன்ற பொய் புகாரை மு.க.ஸ்டாலின் அளித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது, கச்சத்தீவு விவகாரம், இலங்கைத் தமிழர் பிரச்னை, அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு உள்ளிட்ட தி.மு.க.வின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் அக்கட்சி மீது மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. சார்பில் ஸ்டாலின் மனு அளித்துள்ளார். அவரது இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் தங்களது சட்டவிரோத முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது, தோல்வி பயம் ஆகியவை காரணமாக இத்தகைய பொய்யான புகார் மனு அளிக்கப்பட்டிருப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு. சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனுக்கு ஆதரவாக மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் பல்வேறு இடங்களில், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட தி.மு.க.வினர், சென்னை தேனாம்பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு டிபன் பாக்ஸ்களில் பணம் அளித்தபோது, அ.இ.அ.தி.மு.க.வினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதேபோல், கடந்த 19-ம் தேதி இரவு, ராயப்பேட்டை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்த தி.மு.க. பிரமுகரும், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் இத்தகைய பணப்பட்டுவாடா தடுக்கப்பட்டுள்ளதால், தி.மு.க.வினர் பொய் புகார் அளித்திருப்பதாக தமிழ்மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு. ஷேக்தாவூத் குற்றம்சாட்டினார்.

தலைமைத் தேர்தல் அதிகாரியிடம், ஸ்டாலின் அளித்த புகார் மக்களை ஏமாற்றும் செயல் என குற்றம்சாட்டிய மூவேந்தர் முன்னணிக் கழக செயலாளர் திரு.இசக்கிமுத்து, பண முதலாளிகளான தி.மு.க. வேட்பாளர்கள் பணத்தால் ஜெயித்துவிடலாம் என்ற கற்பனையில் இவ்வாறு புகார் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் திரு.செ.கு.தமிழரசன், ஸ்டாலினின் இந்த புகார் விஷமத்தனமானது என்றும், கொஞ்சம்கூட நாணயமின்றி இத்தகைய புகாரை அளித்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு அளித்து வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்த தி.மு.க.வினரின் எண்ணம் பலிக்காமல் போனதால், ஸ்டாலின் இத்தகைய புகாரை அளித்திருப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் திரு.பூவை ஜெகன் மூர்த்தி குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களால் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஸ்டாலின் தெரிவித்திருப்பது, பச்சைப் பொய் என கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் திரு. உ. தனியரசு தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தை, தேர்தலில் செலவிட்டு வெற்றி பெறலாம் என்ற தி.மு.க.வினரின் எண்ணம் பலிக்காததால், ஸ்டாலின் இத்தகைய ஒரு பொய்யான புகாரை அளித்திருப்பதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் திரு. ஜான்பாண்டியன், வாக்குப்பதிவுக்கு முன்னதாக கடைசி நேரத்தில், தி.மு.க.வினர் பணப் பட்டுவாடா செய்வதை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தடுத்துவிட்டதால், இத்தகைய உண்மைக்கு விரோதமான புகாரை, ஸ்டாலின் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00