இலங்கையில் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், 75 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி, தமிழக முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம்

Oct 1 2014 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்கள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, தமிழக முதலமைச்சர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் இன்னும் காவலில் உள்ள 20 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், 75 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு ஆக்கப்பூர்வமான, திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, தமிழக முதலமைச்சர், பிரதமர் திரு. நரேந்திரமோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், புரட்சித் தலைவி அம்மாவின் அயராத விடா முயற்சிகளின் விளைவாக இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருந்த 76 இந்திய மீனவர்கள், நேற்று இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த 76 மீனவர்களில், 72 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - இவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை - இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க, பிரதமர் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள முதலமைச்சர், துரதிருஷ்டவசமாக இம்மீனவர்களுக்குச் சொந்தமான 71 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் இன்னும் விடுவிக்கப்படாமல், அந்நாட்டிலேயே சேதமடைந்து வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இந்தப் படகுகள் மேலும் சேதமடையாமலும், நாசமடையாமலும் தடுக்க அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டியது அவசியமாகிறது - ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து, கடந்த 27-ம் தேதி விசைப்படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள், படகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 28-ம் தேதி, அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று, இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்குக் கொண்டு சென்ற சம்பவத்தையும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 மீனவர்களும், ஆறுகாட்டுத்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 29-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 10-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர் - மற்றொரு சம்பவத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து, 4 மீன்பிடிப்படகுகளில் 16 மீனவர்கள், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, அவர்களை இலங்கைக் கடற்படையினர், கடந்த 30-ம் தேதி அதிகாலை பிடித்துச் சென்று இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்குக் கொண்டு சென்றுள்ளனர் - பாக். நீரிணையில், தமிழக மீனவர்களுக்கு பாரம்பரியமாக உள்ள மீன்பிடி உரிமையை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து மீறி வருகின்றனர் - சர்வதேச கடல் எல்லை தொடர்பான பிரச்னை, உச்சநீதிமன்றத்தின் விசாரணையின் கீழ் உள்ள நிலையில், 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளின்படி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என தமிழ்நாடு அரசும், புரட்சித் தலைவி அம்மாவும், அவரது தனிப்பட்ட முறையில் முறையீடு செய்துள்ளனர் - 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில், இந்தியா-இலங்கை இடையே செய்துகொள்ளப்பட்ட முறையற்ற ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்து, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த விரும்புகிறது - பிரதமர் தலைமையிலான மத்திய அரசு, கச்சத்தீவை மீட்டு, இந்தியா - இலங்கை இடையேயான நீண்டகால மீன்பிடி பிரச்னைக்குத் தீர்வுகாண தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என தாம் நம்புவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில், இன்னும் காவலில் உள்ள 20 மீனவர்களையும், 75 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு ஆக்கப்பூர்வமான, திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00