திருச்சி மணிகண்டம், சின்னசேலம், கடையநல்லூர், காட்டுமன்னார்கோவில், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில், 40 கோடி ரூபாய் செலவில், 5 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு

Jul 24 2014 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக இளைஞர்கள் தொழிற்கல்வி பயின்று, வேலைவாய்ப்பு பெற்று, மிகுந்த பயனடையும் வகையில், திருச்சி-மணிகண்டம், சின்னசேலம், கடையநல்லூர், காட்டுமன்னார்கோவில், உடுமலைப்பேட்டை ஆகிய 5 இடங்களில், 40 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் 5 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், நாமக்கல் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ஆய்வுக்கூடம், வகுப்பறை, நூலக அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று, பேரவை விதி 110 கீழ் முக்கிய அறிக்கை ஒன்றை அளித்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, இளைஞர்களின் தொழிற்கல்வி மேம்பாட்டிற்காக, தமது அரசு, கடந்த 3 ஆண்டுகளில் 15 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.



முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

தமிழகத்தில், 40 கோடி ரூபாய் செலவில், 5 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகங்கள் தொடங்கப்படும் என்பன உள்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00