தன் மீது புகார்களை அள்ளி வீசும் கருணாநிதி, அவருக்கும், மாறன் சகோதரர்களுக்கும் தற்போதுள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பதை வெளியிடத் தயாரா? : சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி

Jul 24 2014 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தன் மீது புகார்களை அள்ளி வீசும் கருணாநிதி, அவருக்கும், மாறன் சகோதரர்களுக்கும் தற்போது உள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பதை வெளியிடத் தயாரா? அரசியலுக்கு வருவதற்கு முன் சொத்து எவ்வளவு? இப்போது, சொத்து மதிப்பு எவ்வளவு? என்ற விவரங்களை வெளியிடவேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு. மார்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க. தலைவர் கருணாநிதி, நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதித்துறை செயல்பாடுகளில் பெருமளவில் தலையிட்டு கடுமையான நிர்பந்தம் செய்ததாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. மார்கண்டேய கட்ஜு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கும், அடுத்தடுத்து அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கவும், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க. மிகுந்த நெருக்குதலும், நிர்பந்தமும் அளித்ததாக நீதிபதி திரு. மார்கண்டேய கட்ஜு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருந்தார். தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர் மீதான திரு. மார்கண்டேய கட்ஜுவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தனது வழக்கமான பாணியில், திரு. மார்கண்டேய கட்ஜுவை கருணாநிதி விமர்சனம் செய்திருந்தார்.

கருணாநிதியின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், திரு. மார்கண்டேய கட்ஜு, தனது சமூக வலைதளத்தில், கருணாநிதிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்துள்ளார். கருணாநிதி தனது தற்போதைய சொத்துக்களின் மதிப்பை வெளியிடவேண்டும் என்றும், கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உட்பட கருணாநிதி மற்றும், அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை வெளியிடவேண்டும் என்றும் திரு. மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். மேலும், அரசியலுக்கு கரணாநிதி வருவதற்கு முன்பு அவரது சொத்து மதிப்பையும், தற்போதைய சொத்து மதிப்பையும் அவர் வெளியிடவேண்டும் என்றும் நீதிபதி திரு. மார்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த பிரச்னையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று அ.இ.அ.தி.மு.க. எழுப்பியது.

மக்களவையில், அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் மு. தம்பிதுரை, மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தின்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இருந்த சர்ச்சைக்குரிய அசோக் குமாருக்கு, பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தி.மு.க. அமைச்சர்கள் யார்? என்பதை வெளியிடவேண்டும் என வலியுறுத்தினார்.

இதே பிரச்னை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் டாக்டர் வா. மைத்ரேயன், இப்பிரச்னையை எழுப்ப முயன்றார். ஆனால், மாநிலங்களவைத் தலைவர் அதற்கு அனுமதி மறுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00