சென்னையில் தொடங்கிய ஆடி சிறப்பு கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனையில், 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது

Jul 28 2014 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதோடு, நெசவாளர்கள் அதிக வருவாய் ஈட்டி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்களை சந்தைப்படுத்தி, ஆடி மாதத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. வரும் 6-ம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் பட்டுச்சேலைகளும், ஈரோடு, கரூர், சென்னிமலை பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் ஏற்றுமதி துணி ரகங்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. சமூகநலத்துறை அமைச்சர் திருமதி. பா. வளர்மதி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திருமதி. எஸ். கோகுல இந்திரா ஆகியோர் கண்காட்சியினைத் தொடங்கி வைத்தனர். இதில், மேயர் திரு.சைதை துரைசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் பருத்தி துணிகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும், பட்டு ரகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00