தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழை - நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்வு

Sep 23 2014 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் மாலை நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்கிறது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட இடங்களிலும், மாநகரில் ஆனையூர், எல்லிஸ்நகர், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் தலமலை, நெய்தானபுரம், கோடிபுரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களுக்கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதேபோல், நாமக்கல்லில், ராசிபுரம், கொல்லிமலை, புதுசத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால், நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, வடதமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00