நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் வழங்கி வரும் ஊக்கத்தொகை குறித்து, தவறான அறிக்கையை வெளியிட்டு, விவசாயிகளிடையே கருணாநிதி தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

Jul 30 2014 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் நீண்டகாலமாக வழங்கி வரும் ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்றும், அப்படி ஊக்கத்தொகை வழங்கி கொள்முதல் செய்தால், மானியம் வழங்கப்பட மாட்டாது என்றும் கருணாநிதி ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டு, டெல்டா பகுதி விவசாயிகளிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். விவசாயப் பெருங்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நடப்பாண்டிலும் நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு 70 ரூபாய் வீதமும், சாதாரண ரகத்திற்கு 50 ரூபாய் வீதமும் வழங்கப்படும் என்றும், இதன்மூலம் சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,470 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு 1,410 ரூபாயும், வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, நெல் கொள்முதலுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான மத்திய அரசின் சுற்றறிக்கை குறித்து கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உரையாற்றினார். விவசாயிகளின் விடிவெள்ளியாக தமது அரசு தொடர்ந்து விளங்கும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00