கருணாநிதி மகன் அழகிரி நடத்தி வரும் பொறியியல் கல்லூரி முறையான அனுமதியின்றி இயங்குவதாக தொடரப்பட்ட வழக்கு : மாணவர் சேர்க்கைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை

Jul 22 2014 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

தி.மு.க. தலைவர் கருணாநிதி மகன் அழகிரி நடத்தி வரும் பொறியியல் கல்லூரி முறையான அனுமதியின்றி இயங்குவதாக தொடரப்பட்ட வழக்கில், அக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை பகுதியில் அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி முறையான சான்றிதழ்களை பெறாமல் நடத்தப்படுவதாக புகார் கூறி, ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில், மாணவர் சேர்க்கைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தனி நீதிபதி அனுமதி வழங்கியிருந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அண்ணா பல்கலைக்கழகம் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு. ஜெயசந்திரன், திரு. மகாதேவன் ஆகியோர் பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும், இதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக் கழகத்திடமிருந்து சுகாதாரம், மென்சாதன பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டனர். ஆனால், இந்த விதியை பின்பற்றி சான்றிதழ் எதுவும் தயா கல்லூரி நிர்வாகம் பெறாததால், மாணவர் சேர்க்கைக்கு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00