ஹைட்ரோ கார்பன், நெக்ஸ்ட் தேர்வு மற்றும் மும்மொழி கொள்கை திட்டங்களுக்கு எதிர்ப்பு - புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

Jul 23 2019 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மாவட்டங்களாக அறிவிக்கக்கோரியும், தஞ்சை மற்றும் நாகையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த கூடாது எனவும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி காவேரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில், விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னர், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், நாகையில் கண்டனப் பேரணி நடைபெற்றது. அவுரித் திடலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. காவல்துறையினரின் தடையை மீறி நடத்தப்பட்ட இந்த பேரணியில், பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், கிராம மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க, ஆட்சியர் அலுவலம் உள்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00