கடந்த ஆண்டு போக்‍சோ சட்டத்தில் 2 ஆயிரத்து 45 வழக்‍குகள் பதிவு - தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தகவல்

Jul 19 2019 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

2017ம் ஆண்டைக்‍ காட்டிலும் 2018ம் ஆண்டு போக்‍சோ சட்டத்தின்கிழ் பதிவு செய்யப்பட்ட வழக்‍குகளின் எண்ணிக்‍கை அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்‍க குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று அளிக்‍கப்பட்ட கொள்கை விளக்‍க குறிப்பில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்‍குகளின் எண்ணிக்‍கை குறித்து தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு போக்‍சோ சட்டத்தின் கீழ் ஆயிரத்து 587 வழக்‍குகளும், 2018ம் ஆண்டு 2 ஆயிரத்து 45 வழக்‍குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

காவல்துறை மானிய கோரிக்‍கை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர், சென்னையில் செயின் பறிப்பு போன்ற குற்றங்களை தடுக்‍க 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்‍கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் காவல்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர், திருப்பூர் மாவட்டத்தில் 99 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்‍கப்படும் என்று தெரிவித்தார்.

தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகளை வானிலிருந்து கண்காணிக்‍க 50 ஆளில்லா விமானங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் - ஆயிரத்து 500 தீயணைப்பு பணியாளர்களுக்‍கு தற்காப்பு சாதனங்களுடன் கூடிய உடைகள் 8 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும் என்பன உள்ளிட்ட புதிய அறிவிப்புகளும் சட்டப்பேரவையில் இன்று வெளியிடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00