தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிக்கை

Jul 8 2019 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4 லட்சத்து 99 ஆயிரத்து 354 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் 4 லட்சத்து23 ஆயிரத்து 035 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ரவீந்திரநாத் குமாரின் இந்த வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தேனி மக்களவைத் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் ரவீந்தரநாத் குமார் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00