தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை

Jun 17 2019 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் ஆற்றவேண்டியக்‍ களப்பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகம், பூந்தமல்லி நகர கழகம் சார்பில், பேருந்து நிலையம், குமணன் சாவடி, கரையான் சாவடி உள்ளிட்ட 10 இடங்களில் இரு சக்கர வாகனங்களில் பேரணி நடைபெற்றது. பேரணியாகச் சென்று, கழக கொடியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. டி.எ.ஏழுமலை ஏற்றி வைத்து, பொதுமக்‍களுக்‍கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பூந்தமல்லி நகர கழக செயலாளர் திரு. து.கந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் கழக வேட்பாளர் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும் வகையிலும், உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களின் வெற்றிக்‍காக களப்பணியாற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழக அமைப்புச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான திரு. மாணிக்கராஜா, ஆலங்குளம் ஒன்றிய கழக செயலாளர் திரு. முருகையா, ஆலங்குளம் நகரக் கழகச் செயலாளர் திரு. சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், திருவட்டார் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வது குறித்து ஆலோசிக்‍கப்பட்டது. திருவட்டார் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. நிமால், மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ஜெங்கின்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00