அமமுக வேட்பாளருக்கு முத்தரையர் சங்கம் முழு ஆதரவு : வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்ய முடிவு

May 15 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்து மாவட்ட முத்தரையர் கூட்டமைப்பு, வீடுவீடாக சென்று பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ளபோவதாக அறிவித்துள்ளது.

கழக கொள்கைபரப்புச் செயலாளர் திரு. தங்கதமிழ்செல்வன் முன்னிலையில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. இ.மகேந்திரனுக்கு, அனைத்து மாவட்ட முத்தரையர் கூட்டமைப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்தனர். வலையங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கழகத்தினருடன் இணைந்து தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்வது தொடர்பாக சிவகங்கை மாவட்ட செயலாளர் திரு. உமாதேவன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் திரு. நடராஜன் மற்றும் அமைப்பாளர் திரு. ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரையர் சங்க புறநகர் மாவட்ட அமைப்பாளர் திரு.ஆறுமுகம், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தங்களது கோரிக்‍கைகளை நிறைவேற்றுவதாக கூறியுள்ளதை சுட்டிக்‍காட்டினார். கழக வேட்பாளரை ஆதரித்து, வீடுவீடாக சென்று பரிசுபெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்‍கப் போவதாக அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00