மதுரை மாநகர் தெற்கு மாவட்ட வட்ட கழகச் செயலாளர் E.அம்பலம் மறைவுக்கு இரங்கல் : கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
May 15 2019 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாநகர் தெற்கு மாவட்ட வட்ட கழகச் செயலாளர் திரு.E.அம்பலம் மறைவுக்கு, கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் 35வது வட்டக் கழகச் செயலாளர் திரு.E.அம்பலம், உடல்நலக் குறைவால் மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.