கழகத்தினர் ஏற்பாடு செய்த மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சி : பரிசுப் பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து மக்கள் மகிழ்ச்சி

May 15 2019 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சூலூர் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி, அ.ம.மு.க.வினர் ஏற்பாடு செய்த மாதிரி வாக்‍குப்பதிவு நிகழ்ச்சியில், பொதுமக்‍கள் பலரும் பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்‍களித்து மகிழ்ந்தனர்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு வாக்கு பதிவு எந்திரத்தில் 15-ம் எண் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் ஏற்கெனவே பரிசு பெட்டகம் சின்னம் ஆழ பதிந்திருக்‍கும் நிலையில், வாக்‍குப்பதிவு இயந்திரத்தில் மிகச்சரியாக இந்த சின்னத்தில் மக்‍கள் வாக்‍களிக்‍கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கழகத்தினர் நடத்தினர். இதற்காக ஏற்கெனவே மாதிரி வாக்கு பதிவு கொண்ட இயந்திரங்கள் ஊராட்சி பகுதிகளில் பணிபுரியும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், சூலூர் தொகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பொள்ளாச்சி நகர கழக செயலாளர் திரு. CTC. K முத்துக்குமார் தலைமையில் கழக நிர்வாகிகள், பொதுமக்களிடம் நேரில் சென்று, பரிசு பெட்டகம் சின்னம், மேலிருந்து கீழாக 15-ம் இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி, வாக்‍களிக்‍க செய்தனர். அப்போது "பீப்" என்ற சத்தத்தை கேட்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த செயல்முறை விளக்‍கம் மூலம் தாங்கள் விரும்பும் பரிசு பெட்டகத்திற்கு வாக்‍கை பதிவு செய்ததில் அவர்கள் பெருமிதம் அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் திரு. ஆனந்த் குமார், கோவை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. K.சாகுல் அமீது, நகர இளைஞர் பாசறை செயலாளர்கள் திரு. செஜித்கான், திரு. ஜீவானந்தம் மற்றும் ஊராட்சி செயலாளர் திரு. AG ரவிக்குமார் மற்றும் கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00