திருப்பரங்குன்றம் சட்டமன்றத்தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளருக்கு ஆதரவாக வெற்றிச் சின்னமான பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு கழகத்தினர் வாக்குசேகரிப்பு

May 15 2019 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளருக்கு ஆதரவாக, வெற்றிச் சின்னமான பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு, கழகத்தினர் உற்சாகப் பெருக்குடன் வாக்கு சேகரித்தனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி கழக வேட்பாளர் திரு. இ. மகேந்திரனுக்கு ஆதரவாக பரிசுபெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி, கீழகுயில்குடி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, வேடர்புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழக மகளிரணி மற்றும் தகவல்தொழில்நுட்ப பிரிவினர் வீடு வீடாக சென்று, மோடி மற்றும் எடப்பாடி அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எடுத்துரைத்தும், கழக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கியும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் காஞ்சிபுரம் மாவட்ட மகளிரணி செயலாளர் வரலட்சுமி, வடசென்னை தகவல்தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ஜீவிதா நாச்சியார், மதுரை தெற்கு மாவட்ட இணை செயலாளர் நித்யா, தெற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் பிரபு, மகளிரணி நிர்வாகிகள் கலா, கிளை கழக செயலாளர்கள் செல்வம், நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கழக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி திருப்பரங்குன்றம் தொகுதி கழக வேட்பாளர் இ.மகேந்திரனுக்கு ஆதரவாக அனுப்பானடி ஹவுசிங்போர்டு, ஐராவதநல்லூர், சிந்தாமணி, அவனியாபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி திரு. சரவணன், பகுதி செயலாளர் திரு. ராமமூர்த்தி, கழக இளைஞரணி இணைசெயலாளர் ராமலிங்க ஜோதி, தலைமை கழக பேச்சாளர் தேனி ராமர் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் உடனிருந்தனர்.

கழக அமைப்பு செயலாரும் நட்சத்திர பேச்சாளருமான நடிகர் செந்தில், திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி திரு. சரவணன், பகுதி செயலாளர் திரு. ராமமூர்த்தி, கழக இளைஞரணி இணைசெயலாளர் திரு. ராமலிங்கஜோதி உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்ப்பாளர் திரு. ஆர் சுந்தர்ராஜ் பேரூரணி உமரிகோட்டை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் திரு. பி.ஆர். மனோகரன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் திரு. உதயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00