சூலூர் சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு, கொங்கு மண்டல முறைப்படி ஏராளமான பெண்கள் உற்சாக வரவேற்பு

May 15 2019 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சூலூர் சட்டமன்றத் தொகுதியில், கழக வேட்பாளர் திரு.சுகுமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு, கொங்கு மண்டல முறைப்படி, ஏராளமான பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், கழக வேட்பாளர் திரு.சுகுமாரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்ட திரு.டிடிவி தினகரன், மாதப்பூர் பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு கொங்கு மண்டல முறைப்படி, பச்சை பந்தல், பாக்கு மற்றும் இளநீர் குலைகளுடன் ஏராளமான பெண்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.எஸ்.ஆர்.செல்வம், மொடக்குறிச்சி குளூர் வேளாண் சங்க துணை தலைவர் திரு.தங்கராஜ், ஈரோடு மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் பவானி சம்பத் ஆகியோர் வரவேற்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மாதப்பூர், தொட்டிபாளையம் மற்றும் சோமனூர் பகுதிகளில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு இடையே வாகனத்தை அனுமதித்து காவல்துறையினர் இடையூறு செய்தனர். காவல்துறையினரின் இந்த செய்கை, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00