பதவி உயர்வு வழங்காமல் முட்டுக்கட்டை போடும் அதிகாரிகள் : விரக்தியில் பதவியை ராஜினாமா செய்ய காவல்துறை ஆய்வாளர் முடிவு

Apr 25 2019 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பதவி உயர்வு மறுக்‍கப்பட்டதால் ரா​ஜினமா செய்ய முடிவு செய்துள்ள காவல் ஆய்வாளர், தனது ராஜினமா கடிதத்தை முதலமைச்சரிடம் நாளை நேரில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் திரு. ஜவஹர், சந்தன கடத்தல் வீரப்பன் சுடப்பட்ட சம்பவத்தில் காட்டில் தங்கி நான்கு பேரை சுட்டு வீழ்த்தியவர். கடந்த 2004-ஆம் ஆண்டு மாண்புமிகு அம்மா அவர்களால் பதவி உயர்வு பெற்று ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து வடசென்னையில் ரவுடிகளின் கூடாரத்தை காலி செய்து, இரண்டு ரவுடிகளை என்கவுண்டர் செய்து வடசென்னைக்கு பெயர் எடுத்த காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்‍கு, கூடுதல் துணை ஆணையராக பொறுப்பு பதவி வகிக்க வேண்டிய நிலையில் இன்றும் ஆய்வாளர் ஆகவே வைத்துள்ளனர். கடந்த 17 வருடங்களாக பதவி உயர்வு வழங்காமல் மேலதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாகவும், பணி உயர்வுக்கு தடையாக உயரதிகாரிகள் இருப்பதாகவும் ஆய்வாளர் திரு. ஜவஹர் குற்றம்சாட்டி உள்ளார். இதனால், முதலமைச்சரை சந்தித்து, நாளை தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க முடிவு​ செய்துள்ளார்.

உச்சநீதிமன்றம் பணி வழங்கக்கோரி வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு காவல்துறை உயரதிகாரிகள் தவறான தகவல் அளித்து பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடுவதால், 17 ஆண்டு காவல்துறையில் சேவை செய்து பெருமை சேர்த்த ஆய்வாளர் திரு. ஜவஹர், நாளை முதலமைச்சரிடம் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00