நாமக்கல் மாவட்டத்தில் குழந்தையை விற்பனையில் ஈடுபட்ட செவிலியர் கைது - ஆடியோ ஆதாரம் வெளியானதால் நடவடிக்கை

Apr 25 2019 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில், குழந்தைகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா என்ற அரசு மருத்துமனை செவிலியர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றவராவார். ஆனால் இவர் வீட்டில் இருந்தபடி்யே கிராமப்புறத்தை சேர்ந்த சில பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை செய்து வருவதாகவும், கூறப்படுகிறது. அதோடு இல்லாமல், அதேபோன்று பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளையும், வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாதவர்களை அணுகி அவர்களிடமிருந்து குழந்தையை பெற்று, பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெள்ளையாக இருக்கும் ஆண் குழந்தை என்றால் குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் வரை விற்கப்படுகிறது. பெண் குழந்தை என்றால் 3 லட்சம் வரை விற்பனையாகிறது. குழந்தைகளின் நிறம், எடை ஆகியவைதான் அதன் விலையை நிர்ணயிக்கின்றன. அதுமட்டுமின்றி 70 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழும் வாங்கி தரப்படுகிறது. குழந்தை விற்பனை குறித்த தொலைபேசி உரையாடல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செவிலியர் அமுதாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00