குடிபோதையில் தகராறு செய்த மகன் கொலை : தற்கொலை நாடகமாடிய தந்தை, தாய், மகன்கள் கைது

Apr 24 2019 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடிபோதையில் தகராறு செய்த பட்டதாரி மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய தந்தை, தாய் ஆகியோர் இரண்டு மகன்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாலாஜாபாத்தை அடுத்த ஐய்யம்பேட்டையை சேர்ந்த மணி என்பவரது மகன் மகேஷ் சிங்கப்பூரில் பணி புரிந்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் நேற்று முன் தினம் குடித்து விட்டு போதையில் தன்னுடைய தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசப்பட்ட அவனது குடும்பத்தினர் மகேஷை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மகேஷின் குடும்பத்தினர் மகேஷின் உடலை வீட்டிலுள்ள ஃபேனில் மாட்டி விட்டு மகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி உள்ளனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட வாலாஜாபாத் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மகேஷின் குடும்பத்தினர் மகேஷை அடித்து கொலை செய்து தூக்கில் மாட்டிய விபரம் தெரியவந்தது. இதனை அடுத்து மகேஷின் குடும்பத்தினரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை எஸ்.எஸ் காலணி பகுதியில் மது போதையில் இரண்டு இளைஞர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் அவர்களை விலக்கிவிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே தள்ளிவிடப்பட்ட ஆசைத்தம்பி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சுந்தர் என்பவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி மேல்பாதி தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் சேகர் என்பவர், கூலி வேலை செய்து வருகிறார். இவர் வேலை இல்லாத நேரங்களில் அருகில் உள்ள ஆற்றில் மீன் பிடித்து வந்துள்ளார். நேற்று ஆற்றில் மீன் பிடிக்க சென்ற அவர் நீண்ட நேரமாக ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி வசந்தா அவரை தேடி சென்றுள்ளார். அப்போது ஆற்றங்கரையில் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த திருவெண்காடு போலிசார் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து சேகரின் மர்ம மரணம் குறித்து போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00