மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்‍கள் முடக்‍கம் - கிரானைட் குவாரி முறைகேட்டில் அமலாக்‍கத்துறை நடவடிக்‍கை

Apr 25 2019 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான 259 கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு வழக்கில், அவரது 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டுவந்த கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 2012-ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் சகாயம், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் குவாரிகளில் நடத்தப்பட்ட விசாரணையில், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வந்த குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 முதல் 2015 வரை, துரை தயாநிதி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் பலர் கைது செய்யப்பட்டனர். துரை தயாநிதி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றதால், கைதாகவில்லை. துரை தயாநிதிக்கு எதிராக, இந்த வழக்கில் 5 ஆயிரத்து 191 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது, துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00