தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு வடமொழி கல்வெட்டுகளை பதிக்‍க முயற்சியா? - தவறான செய்தி என தொல்லியல்துறை விளக்‍கம்

Apr 25 2019 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுக்களை அகற்றிவிட்டு, வடமொழி கல்வெட்டுகளை பதிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பரவும் செய்திகள் தவறானவை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

தஞ்சை பெரிய கோவில் சுற்று சுவர் மண்டபத்தில் இடதுபுற சுவற்றில் பிள்ளையார் சன்னதி அருகில் மராத்திய மொழி கல்வெட்டுகள் இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் தஞ்சை பெரிய கோவிலை எந்தெந்த முறையில் பராமரிக்கலாம் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. அதன் அருகிலேயே தஞ்சை பெரிய கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழ், மராத்தி, கிரந்த எழுத்து கல்வெட்டுகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வந்த ஒரு நபர் சமூக வலைதளங்களில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் அகற்றப்பட்டு இந்தி கல்வெட்டுகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தவறான வீடியோவை வெளியிட்டு உள்ளார். இது குறித்து விளக்‍கமளித்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் திரு. ராசவேலு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த கல்வெட்டுகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற செய்திகள் தவறானவை என்றும், யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00