நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் "பரிசுப் பெட்டகம்" சின்னத்திற்கு வாக்குசேகரிப்பு : செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு

Apr 15 2019 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள், தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு.எஸ்ஆர்.செல்வத்தை ஆதரித்து பெருந்துறை ஒன்றியத்தில் பெண்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது துரோக ஆட்சியை வீழ்த்த பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்‍ கொண்டனர்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு. எஸ்.ஆர். செல்வம் அவர்களுக்கு ராம மூர்த்தி நகர், ராமைய்யா காலனி, ஆறு கோம்பை வீதி, முனியப்பன் கோவில் வீதி, மேட்டுப்பாளையம் வீதி, லட்சுமி நகர், முல்லை வீதி, ராம்நகர் உட்பட பல்வேறு இடங்களில் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு கழக நிர்வாகிகள், துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனர். இதே போல் திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம் பகுதி கழகம் சார்பில் இரு சக்கர வாகன பேரணியாக சென்று கழக நிர்வாகிகள் துண்டு பிரசுரம் வழங்கி பரிசு பெட்டகம் வாக்கு சேகரித்தனர்.இதில் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திருமதி. எஸ்.பொன்னுத்தாய் கடைய நல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடை கால், துரைச் சாமிபுரம், காமராஜபுரம், சங்கு புரம், ஊர் மேலழகியான் கிராமம், வேலாயுதபுரம், பொய்கை, திரிபுர சுந்தரபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பாப்புலர் முத்தையா, திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் திரு. பொய்கை மாரியப்பன், கடைய நல்லூர் ஒன்றிய செயலாளர் திரு. பெரியதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் திரு. வ.து.ந.ஆனந்த், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர்.முத்தையா ஆகியோர் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பரிசுப் பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

நாமக்‍கல் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. பி.பி.சாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக திருச்செங்கோடு கருவேப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திரு நகர் காலனி, குதிரை பள்ளம், எம்ஜிஆர் நகர், இந்திரா நகர், மாங்கொட்டை, சீனிவாசன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திரளான கழக நிர்வாகிகள் பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் திரு. மகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் திரு. கௌதம், பொதுக்குழு உறுப்பினர் திரு. சக்திவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு டி‌.கே. ராஜேந்திரன் கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளருக்கு பொது மக்கள் ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளருடன் கடத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திரு. குப்புசாமி, கடத்தூர் நகர கழக செயலாளர் திரு. சசிகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் திரு. தங்க தமிழ் செல்வன் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட கள்ளர் பள்ளி தெரு , தங்க விநாயகர் கோயில், பெரிய பள்ளிவாசல் வீதி, நாட்டுக்கல் பகுதி, கூலத் தேவர் முக்கு, நெல்லுக் குத்தி புளியமரம், காந்தி சிலை, வரதராஜ புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சென்ற பகுதிகளில் எல்லாம், அவருக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியம் வரவேற்பு அளித்தனர்.இதில் கம்பம் நகர் கழக செயலாளர் திரு. வீரபாண்டி, கழக பொது குழு உறுப்பினர் திரு. ராஜாமணி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் திரு. குமரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் திரு. கனகராஜ், கம்பம் அம்மா பேரவை பொறுப்பாளர் திரு. ஜி.வி.அறிவழகன் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திரு. திருமாறன் ஜி உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

காஞ்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கரிகாலன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் கழக வேட்பாளர் தாம்பரம் நாராயணனை ஆதரித்து, திரிசூலம் ஊராட்சி பகுதிகளில் பரிசு பெட்டக சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் காளிதாஸ், திரிசூலம் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட கழக கலைச்செல்வி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் மதன புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. ஜோதி முருகனுக்‍கு வாக்‍களிக்‍ககோரி கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்‍கு சேகரித்தனர். இதில் மாவட்ட இலக்கிய அணி தலைவர் திரு. ராஜூ, நகர செயலாளர் திரு. கணேசன், கிளை செயலாளர் திரு. ராஜதுரை உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கொடிகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் திரு. தெகலான் பாகவி, இப்ராஹிம் சாஹிப் தெருவிலிருந்து துண்டு பிரசுரம் வழங்கி பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00