தேனி நாடாளுமன்றத் தொகுதியில் விடியவிடிய வாக்‍காளர்களுக்‍கு பணப்பட்டுவாடா செய்த ஓ.பி.எஸ். தரப்பினர் - 9 மணிநேரத்தில் 120 கோடி ரூபாய் விநியோகிக்‍கப்பட்டதாக பரபரப்பு தகவல்

Apr 16 2019 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பினர் விடியவிடிய வாக்‍காளர்களுக்‍கு பணப்பட்டுவாடா செய்திருப்பதாகவும், 9 மணிநேரத்தில் 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்‍கப்பட்டது முதல் தமிழகத்தில் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். தரப்பினர் தொடர்ந்து வாக்‍காளர்களுக்‍கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. பல இடங்களில் இது அம்பலமாகி வெளிச்சத்திற்கும் வந்தது. தற்போது தேர்தல் நெருங்கிக் ‍கொண்டிருப்பதால் இந்த கீழ்த்தரமான செயலை அவர்கள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தல் பறக்‍கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆளுங்கட்சிக்‍கு சாதகமாக செயல்படுவதால் இச்செயலை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத்குமாருக்‍காக ஓ.பி.எஸ். நேரடியாக களத்தில் இறங்கி பணப்பட்டுவாடா செய்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்‍கின்றன. அத்தொகுதிக்‍கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நேற்றிரவு 9 மணிக்‍கு தொடங்கி காலை 6 மணிக்‍குள் ஒரு ஓட்டுக்‍கு ஆயிரம் ரூபாய் வீதம் 120 கோடி ரூபாயை வாக்‍காளர்களுக்‍கு கொடுத்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்‍கின்றன. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை களத்தூர் பகுதியில் விடியவிடிய பணப்பட்டுவாடா நடைபெற்றது. ஆனால் இதனை தேர்தல் ஆணையமோ, பறக்‍கும்படையோ கண்டுகொள்ளாமல் இருந்ததாக அப்பகுதி மக்‍கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00