தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் நள்ளிரவு முதல் அமலுக்‍கு வந்தது மீன்பிடி தடைகாலம் : கடலுக்குச் செல்லாமல் படகுகளை சீரமைக்‍கும் பணியில் மீனவர்கள் தீவிரம்

Apr 15 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
மீன்பிடி தடைகாலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து, மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் தங்களது படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மீன்களின் இனபெருக்க காலம் என வரையறுக்கபட்ட நாள்வரை விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கபட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மீன் பிடி தடை காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது.

மீன்களின் இனப்பெருக்கத்தினை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 650 விசைபடகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மீன் பிடி தடைகாலங்களில் விசைபடகு மீனவர்கள் தங்கள் படகு மற்றும் வலைகளை பழுது பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 400 விசைப்படகுகளையும் மீனவர்கள் துறைமுகத்தில் கரை ஒதுக்கினர். கேரளா மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வருகை நின்றதால் எப்பொதும் பரபரப்பாக காணப்படும் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் தற்போது வெறிசோடி காணப்படுகிறது. இதனிடையே, தமிழக அரசு வழங்கும் மீன்பிடி தடைகால நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00