அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் : பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக கழக நட்சத்திர பேச்சாளர்கள் வாக்கு சேகரிப்பு

Apr 16 2019 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்களுக்‍கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ள கழக நட்சத்திர பேச்சாளர்கள், பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. என்.ஜி.பார்த்திபனை ஆதரித்து, திருத்தணியில் கழக செய்தி தொடர்பாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் பக்கம் வராத மோடி, கடும் புயல் பாதிப்பின்போது வராத மோடி, தற்போது, பன்னீர் செல்வம் மகனுக்கும் தன் கட்சியினருக்கும் பிரச்சாரம் செய்யவதற்காக, தமிழ்நாட்டிற்கு ஓடோடி வருவதாக குற்றம் சாட்டினார். எடப்பாடி அரசின் மக்கள் விரோத ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தென் சென்னை நாடாளுமன்ற கழக வேட்பாளர் திரு. இசக்‍கி சுப்பையாவை ஆதரித்து, சின்னத்திரை நட்சத்திரங்கள் 188-வது வட்ட கழகச் செயலாளர் திரு. மலைராஜன் ஏற்பாட்டின் பேரில், தந்தை பெரியார் நகர், kamakoti nagar, துலுக்கா நாதன் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் கழக வேட்பாளருக்காக பரிசு பெட்டகத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கரிகாலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு.காசி.தங்கவேலை ஆதரித்து, திரைப்பட நடிகர் ஜெயமணி, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடலூர், பேருந்து நிலையம், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய நடிகர் ஜெயமணி, பண வெறி பிடித்த எடப்பாடி, பதவிவெறி பிடித்த பன்னீர்செல்வம், ஜாதி வெறி பிடித்த ராமதாஸ், மதவெறி பிடித்த பிஜேபி இவர்களை நாட்டை விட்டு விரட்ட பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கழக செய்தி தொடர்பாளர் திருமதி ஜமீலா, கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. காசி.தங்கவேலை ஆதரித்து, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, நல்லூர், மங்கலம்பேட்டை மற்றும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00