தேசியக் கட்சிகளால் சீரழிந்துள்ள புதுச்சேரி, சிறப்பு அந்தஸ்துடன் கூடிய வளர்ச்சி பெற, "பரிசுப் பெட்டகம்" சின்னத்தில் வாக்களியுங்கள் - டிடிவி தினகரன் வேண்டுகோள்

Apr 15 2019 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசியக் கட்சிகளால் சீரழிந்துள்ள புதுச்சேரி, சிறப்பு அந்தஸ்துடன் கூடிய வளர்ச்சி பெற, "பரிசுப் பெட்டகம்" சின்னத்தில் வாக்களித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டுமென, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, அம்மா மக்‍கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், புதுச்சேரி மற்றும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்று, கழக வேட்பாளர்களுக்‍கு ஆதரவாக, வெற்றிச் சின்னமாம் "பரிசுப் பெட்டகம்" சின்னத்திற்கு வாக்‍கு சேகரித்து வருகிறார்.

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் திரு. N. தமிழ்மாறன், தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் திரு. N. முருகசாமி ஆகியோரை ஆதரித்து, புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த திரு. டிடிவி தினகரனுக்‍கு, அப்பகுதியைச் சேர்ந்த கழகத்தினரும், பொதுமக்‍களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே எழுச்சியுரையாற்றிய திரு. டிடிவி தினகரன், புதுச்சேரி மாநிலத்தில், நாராயணசாமி, ரெங்கசாமி ஆகிய இரண்டு சாமிகளின் சண்டையால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ








சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00