தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கழக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Mar 25 2019 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கழக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கழக துணைப்பொதுச் செயலாளர் திரு.டிடிவி.தினகரன் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார். இதில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில், கழக வேட்பாளராக பொறியாளர் திரு. லெட்சுமணன் அறிவிக்‍கப்பட்டார். இதனை தொடர்ந்து, குமரி மாவட்ட கழகம் சார்பில், நாகர்கோவில் வடசேரி எம்.ஜி.ஆர். சிலை முன்பாக, கழகத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் திரு. அக்சையா, திரு. கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் திரு. நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

திருச்சி நாடாளுமன்ற கழக வேட்பாளர் திருமதி. சாருபாலா தொண்டைமான், பல்வேறு அமைப்பு மற்றும் சமுதாயத்தலைவர்களை சந்தித்து, ஆதரவு திரட்டினார். தஞ்சை மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் டாக்டர்.திரு.சந்திரசேகர் மற்றும் கத்தோலிக்க திருச்சபை பொருளாளர் திரு. ராஜேந்திரன், செயலாளர் திரு. சுதர்சன் ஆகியோரை, அவர் சந்தித்தார். தொடர்ந்து பாலக்கரை அருட்தந்தை. அமல்ராஜை சந்தித்து ஆசிபெற்று, நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஆதரவு திரட்டினார். நிகழ்ச்சியில், மாவட்டகழக செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

கழகம் சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக, திரு. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களாக திரு. ஜெயக்குமார், திரு. கதிர்காமு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, ஆண்டிப்பட்டியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேருந்து நிலையம் அருகேயுள்ள, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00