அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு : பட்டதாரிகள், அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், பொறியாளர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் பலர் இடம் பெற்றுள்ளனர்

Mar 25 2019 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் வெளியிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்‍கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில், பட்டதாரிகள், அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், பொறியாளர்கள், முன்னாள் மக்‍கள் பிரதிநிதிகள் என பலரும் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் திறம்பட பணியாற்றும் வகையில் அனைத்துக்‍ கல்வித் தகுதிகளையும், ஏற்கெனவே மக்‍கள் பிரதிநிதிகளாக திறம்பட செயலாற்றியவர்களையும் கொண்ட வேட்பாளர்களை, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திரு. P. சந்தான கிருஷ்ணன், வடசென்னை தெற்கு மாவட்டக்‍‍ கழகச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் - முன்னாள் மாமன்ற உறுப்பினர் மற்றும் பணிகள் நிலைக்‍குழு உறுப்பினர் பொறுப்புகளிலும் இருந்துள்ளார் - முன்னாள் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராகவும் பணியாற்றியிருக்‍கிறார்.

அரக்‍கோணம் தொகுதியில் போட்டியிடும் திரு. N.G. பார்த்திபன், வேலூர் கிழக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் - கடந்த 2016-ம் ஆண்டு முதல் சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், வேலூர் மாவட்ட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி இயக்‍குனராகவும் இருந்துள்ளார் - மேலும், சோளிங்கர் நகர கூட்டுறவு வங்கி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் திரு. K. பாண்டுரங்கன், முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார் - தற்போது கழக அமைப்புச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் - கடந்த 2001 முதல் 2011 வரை அணைக்‍கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், மாதனூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் பணிபுரிந்துள்ளார் - தமிழ்நாடு கதர்வாரியத் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு தோல் தொழில் வளர்ச்சி வாரிய தலைவர் மட்றறும் நிர்வாக இயக்‍குனராகவும் பணியாற்றியுள்ளார் - வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பொறுப்பிலும் இருந்துள்ளார் திரு. K. பாண்டுரங்கன்.

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் திரு. ச. கணேசகுமார், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டக்‍ கழகச் செயலாளராக இருந்து வருகிறார் - கடந்த 2001 முதல் 2016 வரை ஒன்றியக்‍ குழு உறுப்பினராகவும், ஊத்தங்கரை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தருமபுரி தொகுதி வேட்பாளரான திரு. P. பழனியப்பன், முன்னாள் அமைச்சராக இருந்தவர் - தற்போது கழக தலைமை நிலையச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் - கடந்த 1996 முதல் 2001 வரை ஒன்றிய குழு உறுப்பினராக இருந்துள்ளார் - 2001 முதல் 2006 வரை மொரப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 முதல் 2016 வரை உயர்கல்வி துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார் - 2016-ல் பாப்பிரெட்பட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.

திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் திரு. A. ஞானசேகர், வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் - மாவட்ட வேளாண் விற்பனைக்‍ குழு உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் - வார்டு கழகச் செயலாளர், நகரக்‍ கழகச் செயலாளர், மாவட்டக்‍ கழக துணைச் செயலாளர் பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

ஆரணித் தொகுதி வேட்பாளரான திரு.G. செந்தமிழன், முன்னாள் அமைச்சராக இருந்தவர் - கழக தேர்தல் பிரிவுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் - 2006 முதல் 2016 வரை சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், 2007 முதல் 2011 வரை சென்னை பல்கலைக்‍கழக ஆட்சிமன்றக்‍ குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் - 2013 முதல் 2016 வரை ஆசிரியர் பயிற்சி பல்கலைக்‍கழக ஆட்சி மன்றக்‍ குழு உறுப்பினராகவும் திரு. செந்தமிழன் பணியாற்றியுள்ளார்.

கள்ளக்‍குறிச்சி தொகுதியில் களம் இறங்கும் திரு. M.கோமுகி மணியன், விழுப்புரம் தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில், 1979-ல் திருமணம் செய்து கொண்டவர் - தரணி புகழ் புரட்சித் தலைவி, புரட்சித் தலைவியின் புகழ் மலர்கள் என 2 நூல்களை வெளியிட்டுள்ளார் - கடந்த 1977-ல் சின்ன சேலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்‍கப்பட்டவர் - கடந்த 2013 - 2018 வரை முடியனூர் தொடக்‍க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராக பணியாற்றியவர் - கழக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத் தலைவர், தியாக துருகம் ஒன்றியக்‍ கழகச் செயலாளர் என பல பொறுப்புகளில் திரு. கோமுகி மணியன் பணியாற்றியுள்ளார்.

திண்டுக்‍கல் தொகுதியில் போட்டியிடும் திரு. P. ஜோதிமுருகன், திண்டுக்‍கல் சுரபி கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையின் தாளாளர் ஆவார் - கடந்த 17 ஆண்டுகளாக மாணவர்களின் நலனைக்‍ கருத்தில் கொண்டு நன்கொடை ஏதுமின்றி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் - மக்‍கள் நலனைக்‍ கருத்தில் கொண்டு கட்டணமின்றி மருத்துவ பணி செய்கிறார்.

கடலூர் தொகுதி வேட்பாளரான திரு. K.R. கார்த்திக், கழக பொறியாளர் அணிச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் - பல நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றுள்ளார்.

தேனி தொகுதியில் போட்டியிடும் திரு. தங்கத் தமிழ்ச்செல்வன், கழக கொள்கை பரப்புச் செயலாளராகவும், தேனி மாவட்டக்‍ கழகச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார் - 2001-ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்‍கப்பட்ட அவர், புரட்சித் தலைவி அம்மா, ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தன் பதவியை ராஜினாமா செய்தார் - 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், 2011 முதல் 2016 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2016-ல் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்‍கப்பட்டார்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. S. பரமசிவ ஐயப்பன், கழக அம்மா பேரவை இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் - 2006 முதல் 2016 வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

தூத்துக்‍குடி தொகுதி வேட்பாளர் டாக்‍டர் ம. புவனேஸ்வரன், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழக இளைஞர் பாசறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார் - புரட்சித் தலைவி அம்மாவின் தீவிர விசுவாசியாக கழக பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்கியுள்ள திரு. E. லெட்சுமணன், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் - கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டட கான்டிராக்‍ட் தொழில் செய்து வருகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00