மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்‍கப்பட்ட வழக்‍கு - 9 பேருக்‍கு ஆயுள் தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை தீர்ப்பு

Mar 21 2019 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில், மு.க. அழகிரிக்‍கு நெருக்‍கமான அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கருணாநிதியின் அரசியல் அடுத்த வாரிசு யார் என்று கருத்து கணிப்பு வெளியிட்ட தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது கடந்த 2007-ஆம் ஆண்டு மு.க. அழகிரி ஆதரவாளர்கள் பெட்ரோல் குண்டு வீசி பயங்கர தாக்‍குதல் நடத்தினர். தமிழகத்தையே உலுக்‍கிய இந்த சம்பவத்தில், அலுவலகத்தில் பணியாற்றிய கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், வினோத்தின் தாயார் பூங்கொடி தரப்பிலும் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் திரு. P.N. பிரகாஷ், திரு. B. புகழேந்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர். அதில், மு.க. அழகிரியின் ஆதரவாரான அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்‍கில் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் மரணமடைந்தார். 9 பேருக்‍கு ஆயுள் தண்டனை விதிக்‍கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 5 பேருக்‍கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபாராதமும் வழக்‍கி தீர்ப்பளித்தனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடாக 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00