சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் காலமானார் - தமிழக சட்டப்பேரவையில் காலி இடங்கள் எண்ணிக்‍கை 22-ஆக உயர்வு

Mar 21 2019 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்‍கு வயது 64.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை வதம்பச்சேரியிலுள்ள தனது வீட்டில் இன்று காலை செய்தித்தாள் படித்துக்‍கொண்டிருந்தார். அப்போது அவருக்‍கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே கனகராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த கனகராஜின் உடல் சுல்தான்பேட்டையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கனகராஜுக்கு, ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் மறைவால் சட்டப்பேரவையில் காலியிடம் 22-ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00