அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் - பொதுமக்கள் வரவேற்பு : கழக நிர்வாகிகள் கூட்டம் - தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை

Mar 22 2019 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள், நாளுக்‍கு நாள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். செல்லும் இடமெல்லாம் அவர்களுக்‍கு பொதுமக்‍கள் தங்கள் ஆதரவையும், வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்‍கு உட்பட்ட கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் செயல் வீரர் - வீராங்கனைகளின் ஆலோசனைக்‍ கூட்டம், மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. எஸ். காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்தக்‍ கூட்டத்தின்போது, மாற்றுக்‍ கட்சிகளைச்​சேர்ந்த நூற்றுக்‍கணக்‍கானோர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍ கொண்டனர். தொகுதிக்‍கு உட்பட்ட திருவிடவாசல், கொடராச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் செல்வி செங்கொடியுடன் சென்று திரு. எஸ். காமராஜ் வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. எஸ்.செந்தமிழன், மயிலாடுதுறை ராஜீவ்காந்தி விளையாட்டு அரங்கம், ஏ.ஆர்.சி இறகுபந்தாட்ட மைதானம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்தனர்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.வ.து.ந. ஆனந்த், தொகுதிக்‍கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்‍கு பொதுமக்‍கள் முழு ஆதரவு தெரிவித்து வரவேற்றனர். அப்போது பேசிய அவர், தான் வெற்றிபெற்றால், மீனவர்கள் பிரச்சினைக்கு மீனவரோடு மீனவராக நின்று குரல் கொடுத்து தீர்வு காண்பேன் என கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட கழக வழக்கறிஞர் அணி சார்பில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. அழகுமுத்து அரியப்பன், கழக வேட்பாளர் திரு. வ.து.ந. ஆனந்த், கழக அமைப்புச் செயலாளர் திரு.ஜி.முனியசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்கான வியூகங்கள் குறித்து இந்தக்‍ கூட்டத்தில் ஆலோசிக்‍கப்பட்டது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. ஞானஅருள்மணி, நெல்லை கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து அக்‍கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனியை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற களப்பணியாற்றுவது என அறிவிக்‍கப்பட்டது. மாநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. கல்லூர் வேலாயுதம், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.க.சொக்கலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகளும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர் வடக்கு தொகுதி தொகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதி மற்றும் வடவள்ளி பகுதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக்‍ கூட்டத்தில், கழக வேட்பாளர் திரு. அப்பாதுரை, மாநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. சேலஞ்சர் துரை மற்றும் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு. சின்னசாமி சிறுபான்மை மாநில இணைச்செயலாளர் திரு. தாரா சபி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக்‍ கூட்டத்தில், கழக வேட்பாளரை பெருவாரியான வாக்‍குகள் வித்தியாசத்தில் பெறச் செய்வது என தீர்மானிக்‍கப்பட்டது.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பேரையூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍ கொண்டனர். இதேபோல் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், மாவட்ட கழகச் செயலாளர் திரு. இ. மகேந்திரன் முன்னிலை கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00